மகளிர் தினம்

மகளிர் தினம்

மகளிர் தினம் யாருக்கானது?

மகளிர்க்கானதா? இதன் பொருள் என்ன? எதற்காக மகளிர் தினம்?

மகளிரை உயர்த்தி வைத்துள்ளதாக அறிவிக்கிறார்களா?

எவ்விதத்தில்? வீட்டில், படிப்பில், வேலையில் எவற்றிலும் ஓர் மறைமுகத் தாக்குதலையே சந்திக்கின்றனர். எங்கும் பயமின்றி தயக்கமின்றி செல்ல இயலவில்லை. ஜார்க்கண்டில் கணவனுடன் சுற்றுலா வந்த ஸ்பெயின் நாட்டு பெண்ணிற்கும், வீட்டிற்கு வெளியே தெருவில் விளையாடிக்கொண்டிருந்த புதுச்சேரி என்றும் பாண்டிச்சேரி என்றும் அழைக்கப்படும் ஊரைச்சேர்ந்த 9 வயது சிறுமிக்கும் நடந்த அநியாயத்தை என்னவென்று சொல்வது? இவ்வாறான செய்திகள் சிலவே வீதிக்கு வருகின்றன. மற்றவை மறைக்கப்படுகின்றன. அதுவும் பெரும்பாலும் பாதிக்கப்பட்டப் பெண்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டே.

வீட்டிலும், சமுதாயத்திலும் பல நிலைகளை சமாளித்தும், பல தடைகளைத் தாண்டியும் பெண்கள் சாதிக்கின்றனர். பெண்கள் முதன்முதலில் வேலைக்குச் சென்றதும் பெண்களைப்பார்த்துக்கொள்ளவதற்கே. அரசியைப் பார்த்துக்கொள்ளவும், அவர்களது தேவைகளை கவனிக்கவுமே முதலில் வேலைக்குச் சென்றனர். பின்னர் அரண்மனைப்பணி, ராஜாங்கம் நடத்துவது, புலவர் என அனைத்துத் துறையிலும் அவர்களது செயல்பாடுகளை உயர்த்திக்கொண்டனர். இவையனைத்தும் தங்களது குடும்பத்தைக் காக்கவே செய்யப்பட்டது. பிற்காலங்களிலேயே இவைத் தனது தனித்திறனை வெளிப்படுத்த என மாறியது. எது எவ்வாறாகினும் பெண்களை மதிக்கவேண்டியது ஆண்களின் கடமை.

தவறு செய்கையில், கண்டிப்பதோ திருத்துவதோ தவறில்லை. ஆனால் அவர்களின் உரிமையை, சுதந்திரத்தை பறிப்பதாகவும், பயமுறுத்துவதாகவும் நடந்துகொள்வது எவ்வகையில் நியாயமற்ற செயலாகும். குழந்தைகளோ, சிறுமிகளோ, வயதுப்பெண்களோ அல்லது வயதான பெண்களோ எவரையும் எங்கும் ஒருவித அச்சத்துடனேயே வாழுமாறு வைத்திருக்கும் வக்கிரத்தினால் என்ன பயன்?

இதில் மகளிர் தினமும், பெண்களைப்போற்றுவதும் அர்த்தமற்றதாகவே கருதமுடிகிறது.

எண்ணற்ற வருத்தங்களுடன்…

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*