கடவுளும் நகைகளும்

கடவுளும் நகைகளும்

ஒரு கோயிலில் சுவாமி சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்த நகைகள் காணாமல் போயின. அவ்வூரைச் சேர்ந்த ஒருவர், இறைவனிடம் ‘என்ன கடவுள் நீ உன் நகைகளையே உன்னால் காப்பாற்றிக்கொள்ள முடியவில்லையே.. நீ எப்படி எங்களைக் காப்பாய்?’ என்று புலம்பி அழுதார்.

அதற்கு அங்கிருந்த ராமகிருஷ்ண பரமஹம்சர், ‘நகைகள் உனக்குத்தான் உயர்வானவையே தவிர கடவுளுக்கு அல்ல. ஒரு பக்தன் தந்தபோது ஏற்றுக்கொண்ட இறைவன், இன்னொருவன் எடுத்துக்கொண்டபோது விட்டுவிட்டார். உயர்வாக அதை நினைக்கும் நீதான் அதனைக் காப்பாற்றியிருக்கவேண்டுமே தவிர, எதையும் பெரிதாக எண்ணாத பரம்பொருள் அல்ல’ என்று பதிலளித்தார்.

இதைக்கேட்ட அந்த அன்பரும் ஏனையோரும் தெளிவடைந்தனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*