பஜகோவிந்தம் – 19

30/01/2021 Sujatha Kameswaran 0

பஜகோவிந்தம் – 19 வைராக்கியம் அவசியம்: ஸுரமந்திர தருமூல நிவாஸ:சய்யா பூதலம் அஜினம் வாஸ: |ஸர்வ பரிக்ரஹ போக த்யாக:கஸ்ய ஸுகம் ந கரோதி விராக: || பதவுரை: ஸுரமந்திர தருமூல நிவாஸ: – கோயிலிலும்மரத்தடியிலும் வாசம்சய்யா – படுக்கைபூதலம் – தரைஅஜினம் – அஜினம்வாஸ: – ஆடைஸர்வ பரிக்ரஹ போக த்யாக: – எல்லா உடமைப்பொருட்களையும்அனுபவிக்காமல்துறப்பது என்கிறகஸ்ய – எவனுக்குத்தான்ஸுகம் – சுகத்தைந கரோதி – செய்வதில்லைவிராக: – […]

பஜகோவிந்தம் – 18

25/01/2021 Sujatha Kameswaran 0

பஜகோவிந்தம் – 18 ஞானமில்லையேல் மோக்ஷமில்லை: குருதே கங்கா ஸாகர கமநம் வ்ரத பரிபாலநம் அதவா தானம்| ஜ்ஞாந விஹீந: ஸர்வ மதேந முக்திம் ந பஜதி ஜந்ம சதேந|| பதவுரை: குருதே – செய்கிறான் கங்கா ஸாகர கமநம் – கங்கைக்கும், கடலுக்கும் (ஸ்நானம்) செய்வதற்காக) செல்வதையாவது வ்ரத பரிபாலநம் – விரதம் ஏற்பதையாவது அதவா – அல்லது தானம் – தானத்தையாவது ஜ்ஞாந விஹீந: – ஞானமில்லாதவன் […]

பஜகோவிந்தம் – 17

20/01/2021 Sujatha Kameswaran 0

பஜகோவிந்தம் – 17 அனுபவத்தாலும் ஆசை அகல்வதில்லை: அக்ரே வஹ்நி: ப்ருஷ்டே பாநு: ராத்ரௌ சுபுக ஸமர்ப்பித ஜாநு: | கரதல பிக்ஷஸ் தருதல வாஸ: ததபி ந முஞ்ச த்யாசா பாச: || பதவுரை: அக்ரே எதிரில் வஹ்நி: நெருப்பு ப்ருஷ்டே பின்புறத்தில் பாநு: சூரியன் ராத்ரௌ இரவில் சுபுக ஸமர்ப்பித ஜாநு: குளிருக்கு இதமாக முழங்காலில் முகத்தை புதைத்து வைத்திருக்கிறான் கரதல பிக்ஷ: கையில் பிட்சை ஏந்துகிறான் […]

திருப்பாவை – பாசுரம் 30

14/01/2021 Sujatha Kameswaran 0

திருப்பாவை வங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனைத் திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி அங்கப் பறைகொண்ட ஆற்றை, அணி புதுவைப் பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே இங்கிப் பரிசுரைப்பார், ஈரிரண்டு மால்வரைத்தோள் செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால் எங்கும் திருவருள்பெற் றின்புறுவர் எம்பாவாய்! – ஆண்டாள்

திருப்பாவை – பாசுரம் 29

13/01/2021 Sujatha Kameswaran 0

திருப்பாவை சிற்றம் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன் பொற்றா மரையடியே போற்றும் பொருள் கேளாய்; பெற்றம் மேய்த்துண்ணும் குலத்திற் பிறந்து நீ குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது; இற்றைப் பறைகொள்வான் அன்று காண் கோவிந்தா! எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமே ஆவோம்; உனக்கே நா மாட்செய்வோம்; மற்றைநம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்! – ஆண்டாள்

திருப்பாவை – பாசுரம் 28

12/01/2021 Sujatha Kameswaran 0

  திருப்பாவை கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்; அறிவொன்று மில்லாத ஆய்க்குலத்து உன்தன்மைப் பிறவிப் பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்; குறைவொன்று மில்லாத கோவிந்தா! உன்தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது! அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச் சிறுபேர ழைத்தனவும் சீறி யருளாதே, இறைவா, நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்! – ஆண்டாள்

திருப்பாவை – பாசுரம் 27

11/01/2021 Sujatha Kameswaran 0

திருப்பாவை கூடாரை வெல்லுஞ்சீர்க் கோவிந்தா! உன்தன்னை பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்; நாடு புகழும் பரிசினால் நன்றாக, சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே பாடகமே யென்றனைய பல்கலனும் யாம் அணிவோம்; ஆடை உடுப்போம்; அதன்பின்னே பாற்சோறு மூடநெய் பெய்து முழங்கை வழிவார கூடியிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்! – ஆண்டாள்

திருப்பாவை – பாசுரம் 26

10/01/2021 Sujatha Kameswaran 0

திருப்பாவை மாலே! மணிவண்ணா! மார்கழி நீராடுவான் மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல் ஞாலத்தை எல்லாம் நடுங்குமுரல்வன பாலன்ன வண்ணத்துள் பாஞ்சசன்னியமே போல்வன சங்கங்கள் போய்ப்பாடுடையனவே, சாலப்பெரும் பறையே, பல்லாண்டிசைப்பாரே, கோல விளக்கே, கொடியே, விதானமே, ஆலின் இலையாய்! அருளேலோர் எம்பாவாய்! – ஆண்டாள்

திருப்பாவை – பாசுரம் 25

09/01/2021 Sujatha Kameswaran 0

திருப்பாவை ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர, தரிக்கிலானாகித் தான் தீங்கு நினைந்த கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை அருத்தித்து வந்தோம்; பறைதருதி யாகில் திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி வருத்தமுந்தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்! – ஆண்டாள்

திருப்பாவை – பாசுரம் 24

08/01/2021 Sujatha Kameswaran 0

திருப்பாவை அன்று இவ்வுலகம் அளந்தாய்! அடிபோற்றி, சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய்! திறல்போற்றி, பொன்றச் சகடம் உதைத்தாய்! புகழ்போற்றி, கன்று குணிலா எறிந்தாய்! கழல்போற்றி, குன்று குடையா எடுத்தாய்! குணம்போற்றி, வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி, என்றென்று உன்சேவகமே ஏத்திப் பறைகொள்வான் இன்றுயாம் வந்தோம், இரங்கேலோர் எம்பாவாய்! – ஆண்டாள்

1 2 3