பஜகோவிந்தம் – 31

பஜகோவிந்தம் – 31

குருவின் திருவடிகளே சரணம்:

குரு சரணாம்புஜ நிர்ப்பர பக்த:
ஸம்ஸாராத் அசிராத் பவமுக்த: |
ஸேந்த்ரிய மானஸ நியமாத் ஏவம்
த்ரக்ஷ்யஸி நிஜ ஹ்ருதயஸ்த்தம் தேவம் ||

பதவுரை:

குரு சரணாம்புஜ                            – குருவினுடைய திருவடிக்                                                                                         கமலங்களில்
நிர்ப்பர பக்த:                                   – பாரத்தை வைத்து பக்தி செய்பவனாகி
ஸம்ஸாராத்                                      – உலகிலிருந்து
அசிராத்                                              – விரைவில்
பவமுக்த:                                           – பிறவியற்றவனாகி
ஸேந்த்ரிய மானஸ நியமாத்     – புலன்களையும் மனத்தையும்                                                                                கட்டுப்படுத்துவதாலே
ஏவம்                                                    – மேலும்
த்ரக்ஷ்யஸி                                         – பார்க்கப்போகிறாய்
நிஜ ஹ்ருதயஸ்த்தம்                     – தன் உள்ளத்தில் உள்ள
தேவம்                                                 – இறைவனை

 

கருத்து:

நம்முடைய புண்ணிய பாவங்களாகிய பாரத்தை எல்லாம் குருவினிடம் அர்ப்பணம் செய்து, பக்தி செய்தோம் என்றால், விரைவிலேயே நமது பிறவித்தளை நீங்கும். புலன்களையும் மனத்தையும் கட்டுப்படுத்துவதனால் நம் உள்ளத்தில் அந்தர்யாமியாக உள்ள இறைவனை தரிசிக்கலாம். இவ்வாறு குருவினை சரணடைவதன்மூலம் பரம்பொருளான இறைவனை தரிசிக்கமுடியும் என்று அனைவரையும் வழிநடத்துகிறார் ஆதிசங்கரர்.

2 Comments on பஜகோவிந்தம் – 31

  1. மிகவும் உயரிய கருத்துகளை எல்லோருக்கும் எளிதில் புரியும் வண்ணம் ஒவ்வொரு சீருக்கும் தனித்தனியாகப் பொருள் தந்து பின் ஒரு பாடலின் முழுப் பொருளையும் கீழே தந்தது சிறப்பு. பெருமாள் அருள் உங்களுக்கு என்றும் கிடைப்பதாக. நன்றி

Leave a Reply

Your email address will not be published.


*