கொன்றை வேந்தன்

08/06/2016 Sujatha Kameswaran 2

கொன்றை வேந்தன் 90. ஒத்த இடத்து நித்திரை செய். மேடு பள்ளம் ஏதும் இல்லாத சமதள இடத்தில் உறங்கவேண்டும். 91. ஓதாதார்க்கு இல்லை உணர்வொடும் ஒழுக்கம். அறம் கூறும் நூல்களைப் படித்தறியாதவர்களிடம் நல்ல சிந்தனை, ஒழுக்கமான செயல்கள் இருக்காது.

கொன்றை வேந்தன்

07/06/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 88. வேந்தன் சீறின் ஆந்துணை இல்லை. ஒருவர் மீது அரசன் கோபம் கொண்டாராகின், அவரை அவ்வரசனிடமிருந்து காப்பாற்ற யாரும் துணைப் புரியமாட்டார். 89. வைகல்தோறும் தெய்வம் தொழு. தினமும் இறைவனை வணங்கவேண்டும்.

கொன்றை வேந்தன்

06/06/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 86. ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு. மனம் சற்றும் தளராத ஊக்கமே, செல்வத்தை வளரச்செய்யும். 87. வெள்ளைக்கு இல்லை கள்ளச் சிந்தனை. தூய மனம் உடையவரிடம் வஞ்சக எண்ணம் இராது.

கொன்றை வேந்தன்

05/06/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 84. வீரன் கேண்மை கூரம்பு ஆகும். வீரனுடனான நட்பானது, நம் கையில் கூரான அம்பு இருப்பதற்குச் சமம். 85. உரவோர் என்கை இரவாது இருத்தல். மன உறுதி என்பது, பிறரிடம் சென்று எதையும் யாசிக்காமல் இருப்பதாகும்.

கொன்றை வேந்தன்

04/06/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 82. வானம் சுருங்கின் தானம் சுருங்கும். மழைப் பொழிவது குறைந்து போனால், நாட்டு வளம் குறையும் காரணத்தால், மக்களிடம் கொடைக்குணமும் குறைந்துவிடும். 83. விருந்திலோர்க்கு இல்லை பொருந்திய ஒழுக்கம். விருந்தினர்களை உபசரிக்காதவர்களிடம் இல்லறத்தின் நற்பண்புகள் இருக்காது.

கொன்றை வேந்தன்

03/06/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 80. மோனம் என்பது ஞான வரம்பு ஒருவர் பெற்ற ஞானத்தின் எல்லை என்பது, பேசுவதைத் தவிர்த்து மௌனமாக இருப்பதேயாகும். 81. வளவன் ஆயினும் அளவறிந்து அழித்து உண். பேரரசனாக இருந்தாலும், தன்னிடமுள்ள செல்வத்தின் அளவை அறிந்து, அதற்கேற்ற செலவு செய்து, உண்டு வாழவேண்டும்.

கொன்றை வேந்தன்

02/06/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 78. மைவிழியார்தம் மனையகன்று ஒழுகு. மைதீட்டிய கண்களால் ஆண்களை மயக்கி இழுக்கும் விலைமகளிரின் வீட்டை நெருங்காமல் வாழவேண்டும். 79. மொழிவது மறுக்கின் அழிவது கருமம். பெரியோர்களின் அனுபவ உரையைக் கேட்காமல் செய்கின்ற செயல்கள் கெட்டுப்போகும்.

கொன்றை வேந்தன்

01/06/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 76. மெத்தையில் படுத்தல் நித்திரைக்கு அழகு. இலவம் பஞ்சு மெத்தையில் உறங்குவது ஆழ்ந்த உறக்கத்தையும், ஆரோக்கியத்தையும் தரும். 77. மேழிச் செல்வம்படாது. உழவுத் தொழிலால் வரும் செல்வம் ஒருநாளும் அழிந்து போகாது.