இனிப்புப் பிட்டு

இனிப்புப் பிட்டு

இனிப்புப் பிட்டு செய்ய தேவையான பொருட்கள்

அரிசிமாவு/கொழுக்கட்டை மாவு – 200 கிராம் (or) 1 கப்

வெல்லம் – 200 கிராம் (or) 1 கப்

நெய் – 100 கிராம் (or) 1/2 கப்

ஏலக்காய் – 7

முந்திரிபருப்பு – 15

திராட்சை – 15

தேங்காய் துருவல் – 100 கிராம்

தண்ணீர் – தேவையான அளவு

உப்பு – 1 சிட்டிகை

மஞ்சள் பொடி – 1 சிட்டிகை


செய்முறை:

அரிசிமாவை வெறும் வாணலியில் சிவக்க வறுக்கவும். 1/2 கப் தண்ணீரைக் கொதிக்கவைத்து அதில் மஞ்சள் பொடி, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து லேசான சூட்டில் வறுத்த மாவில் சிறிது சிறிதாக விட்டு கிளறவும். மாவு கட்டியாக/மொத்தையாக ஆகக்கூடாது. உதிராக இருக்கவேண்டும்.

இந்த மாவை சல்லடையில் சலித்தால் கீழே கட்டி இல்லாமல் விழும். இதை இட்லிதட்டில் வைத்து இட்லி வேகவைப்பது போல ஆவியில் 10 நிமிடங்கள் வேகவைத்து எடுத்து, நன்கு ஆறியதும் உதிர்த்துக்கொள்ளவேண்டும். இதனுடன் துருவிய தேங்காய் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து கலக்கவும்.

வெல்லத்தை ஒரு கரண்டி தண்ணீர் சேர்த்து பாகு வைத்து, வெல்லம் கரைந்ததும் வடிகட்டி மீண்டும் பாகு வைக்கவும். கெட்டிபாகு (தண்ணீரில் ஒரு ஸ்பூன் பாகை விட்டால் உருண்டு வரும்) பதம் வந்ததும் அதைக் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உதிர்த்தபிட்டில் விட்டு வேகமாகக் கலக்கவும். பாகு நன்கு பரவியதும் கட்டியாகாமல் கைகளால் நன்கு கலக்கவும். பிட்டு பாகுடன் சேர்ந்துகொண்டு நன்கு உதிராக வரும்.

நெய்யை சுடவைத்து அதில் முந்திரி மற்றும் திராட்சையை வறுத்து பிட்டுமாவுடன் கலக்கவும். இனிப்புப்பிட்டு தயார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*