தக்காளி தால்
தேவையானப் பொருட்கள் :
(இருவருக்கான அளவு)
தக்காளி – 3
பாசிப்பருப்பு – 100கிராம்
பச்சைமிளகாய். – 4
மஞ்சள் தூள். – 1/4 ஸ்பூன்
உப்பு. – 3/4 ஸ்பூன்
கருவேப்பிலை
& கொத்தமல்லி. – 1/4 கைப்பிடி அளவு
தாளிக்க:
கடுகு – 1 ஸ்பூன் அளவு
உளுத்தம்பருப்பு – 1 ஸ்பூன் அளவு
கடலைப்பருப்பு – 1 ஸ்பூன் அளவு
நல்லெண்ணெய். – 1 ஸ்பூன் அளவு
செய்முறை:
பாசிப்பருப்பை நன்றாக தண்ணீரில் அலசி ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து 3 விசில் வரும்வரை குக்கரில் வேகவைக்கவும். பிறகு ஒரு வாணலியில் தாளிக்கவேண்டியவற்றை தாளித்து, அதில் வெந்த பாசிப்பருப்பு+தக்காளி கலவையை சேர்க்கவும். இதனுடன் பொடியாக நறுக்கிய பச்சைமிளகாயை சேர்த்து மஞ்சள் தூளையும் உப்பையும் சேர்க்கவும். சிறிது கொதிவந்ததும், பொடியாக நறுக்கிய கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லியை சேர்த்து கிளறி, 2 நிமிடங்கள் கொதித்ததும் இறக்கிவைத்துவிடலாம்.
இதை சப்பாத்தி, தோசை மற்றும் சாதத்திற்கும் பயன்படுத்தலாம்.
Leave a Reply