கடவுளும் நகைகளும்

28/03/2024 Sujatha Kameswaran 0

கடவுளும் நகைகளும் ஒரு கோயிலில் சுவாமி சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்த நகைகள் காணாமல் போயின. அவ்வூரைச் சேர்ந்த ஒருவர், இறைவனிடம் ‘என்ன கடவுள் நீ உன் நகைகளையே உன்னால் காப்பாற்றிக்கொள்ள முடியவில்லையே.. நீ எப்படி எங்களைக் காப்பாய்?’ என்று புலம்பி அழுதார். அதற்கு அங்கிருந்த ராமகிருஷ்ண பரமஹம்சர், ‘நகைகள் உனக்குத்தான் உயர்வானவையே தவிர கடவுளுக்கு அல்ல. ஒரு பக்தன் தந்தபோது ஏற்றுக்கொண்ட இறைவன், இன்னொருவன் எடுத்துக்கொண்டபோது விட்டுவிட்டார். உயர்வாக அதை நினைக்கும் […]

உழவாரப்பணி

19/05/2021 Sujatha Kameswaran 0

உழவாரப்பணி: கோயிலை சுத்தப்படுத்துவது உழவாரப்பணியாகும். இதைச் செய்ய தோசைக்கரண்டி வடிவில் ஒரு கருவியைப்பயன்படுத்துவர் இதற்கு, ‘உழவாரப் படை’ என்று பெயர். திருக்கோவில்களில் சூழ்ந்திருக்கும் ஒட்டடைகள் மற்றும் அழுக்குகளை நீக்குவது. எண்ணெய் பிசுக்கினால் அழுக்குப் படிந்த விளக்குகளை சுத்தம் செய்தல். வாரம் ஒருமுறை திருக்கோயிலை பசுஞ்சாணம் இட்டு மொழுகுதல். கோவிலுக்கு வருவோர் போடும் குப்பைகளை குப்பைக் கூடைகளைப் போடுவது. அவ்வாறு ஆங்காங்கேக் குப்பைப்போடுபவரை குப்பைத்தொட்டியில் போடச்செய்வது.கோபுரங்களில், மதில்சுவர்களில் முளைத்திருக்கும் செடிகளை அகற்றுதல். […]

பஜகோவிந்தம் – 19

30/01/2021 Sujatha Kameswaran 0

பஜகோவிந்தம் – 19 வைராக்கியம் அவசியம்: ஸுரமந்திர தருமூல நிவாஸ:சய்யா பூதலம் அஜினம் வாஸ: |ஸர்வ பரிக்ரஹ போக த்யாக:கஸ்ய ஸுகம் ந கரோதி விராக: || பதவுரை: ஸுரமந்திர தருமூல நிவாஸ: – கோயிலிலும்மரத்தடியிலும் வாசம்சய்யா – படுக்கைபூதலம் – தரைஅஜினம் – அஜினம்வாஸ: – ஆடைஸர்வ பரிக்ரஹ போக த்யாக: – எல்லா உடமைப்பொருட்களையும்அனுபவிக்காமல்துறப்பது என்கிறகஸ்ய – எவனுக்குத்தான்ஸுகம் – சுகத்தைந கரோதி – செய்வதில்லைவிராக: – […]

திருப்பாவை – பாசுரம் 23

07/01/2021 Sujatha Kameswaran 0

திருப்பாவை மாரிமலை முழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும் சீரியசிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து, வேரிமயிர் பொங்க எப்பாடும் பேர்ந்துதறி, மூரிநிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப், போதருமா போலேநீ பூவைப்பூவண்ணா! உன் கோயில்நின்றும் இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய சீரியசிங் காசனத்திருந்து யாம்வந்த காரியம் ஆராய்ந் தருளேலோர் எம்பாவாய்! – ஆண்டாள்

திருப்பாவை – பாசுரம் 14

29/12/2020 Sujatha Kameswaran 0

திருப்பாவை உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள் செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பின காண்; செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர், தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போகின்றார்; எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும் நங்காய்! எழுந்திராய், நாணாதாய்! நாவுடையாய்! சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்! – ஆண்டாள்

திருப்பாவை – பாசுரம் 6

21/12/2020 Sujatha Kameswaran 0

திருப்பாவை – பாசுரம் 6 புள்ளும் சிலம்பினகாண்; புள்ளரையன் கோயிலில்வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?பிள்ளாய்! எழுந்திராய், பேய்முலை நஞ்சுண்டுகள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சிவெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினைஉள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்உள்ளம்புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்! – ஆண்டாள்

கோயிலின் அமைப்பு

29/07/2019 Sujatha Kameswaran 0

ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு அமைப்பு இருக்கும். பெரும்பாலும் புராதன கோயில்களின் அமைப்பு ஒரே விதத்திலேயே அமையும். ஆகம விதிகளின்படி கோயிலை நிர்மாணித்திருப்பர். கோயிலுக்கு அதிலுள்ள பல விஷயங்கள் அழகு சேர்த்தாலும், கோயிலின் மண்டபங்கள் தனிச்சிறப்பு வாய்ந்தவை. ஒவ்வொரு மண்டபமும் ஒவ்வொரு நோக்கத்திற்காக அமைக்கப்பட்டிருக்கும். அவற்றைப்பற்றி சுருக்கமாகக் காண்போம்; 1. அர்த்த மண்டபம் 2. மஹா மண்டபம் 3. நிருத்த மண்டபம் 4. பதினாறுகால் மண்டபம் 5. நூற்றுக்கால் (அ) ஆயிரங்கால் […]

ஸ்ரீ சக்கரம்

15/01/2017 Sujatha Kameswaran 0

ஸ்ரீ சக்கரம் சமதளமாக, கிடைமட்டத்தோடு இருக்கும் ஸ்ரீ சக்கரத்திற்கு ‘பூப்ரஸ்தாரம்’ என்று பெயர். காஞ்சி காமாட்சி அம்மன் சன்னதியில் உள்ள ஸ்ரீசக்கரம் “பூப்ரஸ்தாரம்” ஆகும். தொடக்க ஆவரணங்கள் உயரமாகவும் பின்பு வருபவை சம தளமாகவும் இருப்ப்பவை ‘அர்த்த மேரு’ எனப்படும். மாங்காடு காமாட்சி அம்மன் சன்னதியில் “அர்த்த மேரு” உள்ளது. ஸ்ரீ சக்கரத்தில், நீள அகலங்கள் மட்டும் அல்லாமல், உயரமும் சேர்த்து, மூன்று தளங்களில் அடுக்கடுக்காக, கூம்பு வடிவத்தில் முடிவது […]

தெய்வச் சிலைகள்

02/11/2016 Sujatha Kameswaran 1

தெய்வச்சிலைகள்-தெய்வீகச்சிலைகள் இந்தியத் திருநாட்டின் பாரம்பரியமிக்க பல விஷயங்களில் தெய்வச் சிலைகள் பெரும் சிறப்புகள் வாய்ந்தவைகளாகத் திகழ்கின்றன. ஒளி வடிவான இறைவனுக்கு பக்தர்கள் தங்கள் கற்பனைத் திறனாலும், தெய்வத்துடன் நெருக்கமான உணர்வு வேண்டும் என்பதாலும் உருவ அமைப்பை ஏற்படுத்தினர். ஆதி மனிதர்கள் முதலில் இயற்கையையே தெய்வமாக வழிபட்டனர் என்பதனை வரலாற்றின் மூலம் அறியலாம். சூரியன், அக்னி(நெருப்பு), காற்று, மலை, நீர், பூமி ஆகிய இயற்கையை வழிபட்ட மக்கள், தங்கள் வழிபாட்டின் அடுத்த […]

கொன்றை வேந்தன்

13/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 38. தாயிற்சிறந்ததொரு கோயிலும் இல்லை. பெற்ற தாயைவிட சிறந்த வணங்கத்தக்க கோயில் இல்லை.   39. திரைகடல் ஓடியும் திரவியம் தேடு. கடல் தாண்டி வெளிநாடு சென்றாவது, பொருள் ஈட்டவேண்டும்.  

1 2