வெண்சாமரம்

29/03/2024 Sujatha Kameswaran 0

வெண்சாமரம் இறைவனுக்கு ஆராதனை சமயத்தில் வெண்சாமரம் வீசுவர். வெண்சாமரமானது கவரிமான்களின் ரோமங்களினால் ஆனது. இதற்கு வேத மந்திரங்களை ஈர்க்கும் சக்தி உண்டு. இறைவனின் திருமேனியிலிருந்து ஒளிக்கதிர்களாகவும், ஒலி அதிர்வுகளாகவும் வெளிவரும் வேத மந்திரங்களையும் பீஜாட்சரங்களையும் (எழுத்துக்களின் ஆதி) எட்டு திசைகளிலும் பரவச் செய்வதற்காகவே வெண்சாமரம் வீசப்படுகிறது.

ஐந்து வகை நமஸ்காரங்கள்

22/12/2021 Sujatha Kameswaran 0

நமஸ்காரம் செய்வது / வணங்குவது எனும் முறையில் ஐந்து விதங்கள் உள்ளன. 1. தலையை மட்டும் குனிந்து வணங்குதல் ‘ஏகாங்க நமஸ்காரம்’ எனப்படும். அதாவது ஒரு அங்கத்தினால் வணங்குவது. 2. தலைக்குமேல் இருகைகளையும் கூப்பி வணங்குவது, ‘திரியங்க நமஸ்காரம்’ என்பர். மூன்று அங்கங்களால் நமஸ்காரம் செய்வது. 3. இருகைகள், இருமுழங்கால்கள், தலை ஆகிய ஐந்தும் நிலத்தில்பட வணங்குவது ‘பஞ்ச அங்க நமஸ்காரம்’ எனப்படும். அதாவது ஐந்து அங்கங்களால் நமஸ்கரிப்பது. 4. […]

பஜகோவிந்தம் – 31

17/05/2021 Sujatha Kameswaran 2

பஜகோவிந்தம் – 31 குருவின் திருவடிகளே சரணம்: குரு சரணாம்புஜ நிர்ப்பர பக்த:ஸம்ஸாராத் அசிராத் பவமுக்த: |ஸேந்த்ரிய மானஸ நியமாத் ஏவம்த்ரக்ஷ்யஸி நிஜ ஹ்ருதயஸ்த்தம் தேவம் || பதவுரை: குரு சரணாம்புஜ                            – குருவினுடைய திருவடிக்                        […]

திருவெம்பாவை – பாசுரம் 18

02/01/2021 Sujatha Kameswaran 0

திருவெம்பாவை – பாசுரம் – 18 அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும் விண்ணோர் முடியின் மணித்தொகை வீறற்றாற் போல் கண்ணார் இரவி கதிர் வந்து கார் கரப்பத் தண்ணார் ஒளி மழுங்கித் தாரகைகள் தாம் அகல பெண்ணாகி ஆணாய் அலியாய் பிறங்கொளி சேர் விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகி கண்ணார் அமுதமாய் நின்றான் கழல்பாடி பெண்ணே இப்பூம்புனல் பாய்ந்தாடேலோர் எம்பாவாய். – மாணிக்கவாசகர் விளக்கம் : தோழியே! திரு அண்ணாமலை அண்ணலது […]

ஒளவையாரின் இலக்கிய ஞானம்

30/08/2020 Sujatha Kameswaran 0

ஒளவையார் இறைவனின் அருளால், இலக்கிய ஞானமும், உலக அறிவில் மேம்பட்ட எண்ணமும் உடையவராய் திகழ்ந்தார். உலக வாழ்க்கை முறைப்பற்றியும், அதிலிருந்து மேம்பட்ட நிலையை அடைவதற்கான வழிகளையும் தம் இலக்கிய ஞானத்தின் துணைக்கொண்டு அனைவருக்கும் தெளிவுபடுத்தினார். அவற்றுள் ஒரு பகுதி: அரியது: அரிது அரிது மானிடர் ஆதல் அரிது;மானிடர் ஆயினும் கூன் குருடு செவிடுபேடு நீங்கிப் பிறத்தல் அரிது.பேடு நீங்கிப் பிறந்த காலையும்ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது;ஞானமும் கல்வியும் நயந்த காலையும்தானமும் […]

பஜகோவிந்தம் – 11

20/05/2020 Sujatha Kameswaran 0

11. ஆசையும் பொருளும் நிலையற்றவை வயஸி கதே க:  காமவிகார: சுஷ்கே நீரே க: காஸார:  | க்ஷீணே வித்தே க: பரிவார: ஜ்ஞாதே தத்வே க: ஸம்ஸார:  || பதவுரை: வயஸி                                      –  வயதானது கதே            […]

பஜகோவிந்தம் – 8

08/04/2020 Sujatha Kameswaran 0

பஜகோவிந்தம் – 8 தெய்வ சிந்தனைத் தேவை பாலஸ்தாவத் க்ரீடாஸக்த: தருணஸ்தாவத் தருணீஸக்த: வ்ருத்தஸ்தாவத் சிந்தாஸக்த: ப்ரே ப்ரஹ்மணி கோऽபி ந ஸக்த: || பதவுரை: பால: தாவத்                           – பாலகனோவென்றால் க்ரீடாஸக்த:                           – விளையாட்டில் […]

கொன்றை வேந்தன்

07/06/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 88. வேந்தன் சீறின் ஆந்துணை இல்லை. ஒருவர் மீது அரசன் கோபம் கொண்டாராகின், அவரை அவ்வரசனிடமிருந்து காப்பாற்ற யாரும் துணைப் புரியமாட்டார். 89. வைகல்தோறும் தெய்வம் தொழு. தினமும் இறைவனை வணங்கவேண்டும்.