மகளிர் தினம்

08/03/2024 Sujatha Kameswaran 0

மகளிர் தினம் மகளிர் தினம் யாருக்கானது? மகளிர்க்கானதா? இதன் பொருள் என்ன? எதற்காக மகளிர் தினம்? மகளிரை உயர்த்தி வைத்துள்ளதாக அறிவிக்கிறார்களா? எவ்விதத்தில்? வீட்டில், படிப்பில், வேலையில் எவற்றிலும் ஓர் மறைமுகத் தாக்குதலையே சந்திக்கின்றனர். எங்கும் பயமின்றி தயக்கமின்றி செல்ல இயலவில்லை. ஜார்க்கண்டில் கணவனுடன் சுற்றுலா வந்த ஸ்பெயின் நாட்டு பெண்ணிற்கும், வீட்டிற்கு வெளியே தெருவில் விளையாடிக்கொண்டிருந்த புதுச்சேரி என்றும் பாண்டிச்சேரி என்றும் அழைக்கப்படும் ஊரைச்சேர்ந்த 9 வயது சிறுமிக்கும் […]

எண்ணங்கள் வண்ணங்கள்

21/04/2016 Sujatha Kameswaran 0

எண்ணங்கள் வண்ணங்கள் பயமும் அச்சமும்: வாழ்க்கையில் பயம் இருக்கலாம், ஆனால் பயமே வாழ்வாகக்கூடாது. ஒவ்வொன்றிற்கும் பயப்படவோ, அச்சமடையவோ ஆரம்பித்தால், எதனையும் சரியாகச் செய்யமுடியாது. தொடங்கிய நிலையிலேயே அது முடிவடைந்துவிடும். செயலைத் தொடங்கும்போதோ அல்லது இடையிலோ ஏற்படும் தயக்கம் வேறு, அச்சமயம் தோன்றும் பயம் என்பது வேறு. தயக்கம் என்பது செயலின் போக்குக்கேற்ப தானே நீங்கிவிடும். ஆனால் செயல் குறித்த பயம், செயலிற்கான உற்சாகத்தைக்குறைத்துவிடும். நாம்தான் இவற்றை முயற்சியெடுத்து நீக்கிக்கொள்ளவேண்டும். தவிர்க்கமுடியாமல் […]

எண்ணங்கள் வண்ணங்கள்

18/04/2016 Sujatha Kameswaran 0

எண்ணங்கள் வண்ணங்கள் தயக்கமும் அச்சமும்: எந்த ஒரு செயலைத் தொடங்குவதற்கு முன்னரும் நமது ஆழ்மனத்தில் அச்செயலைக்குறித்த ஒரு அச்சம் தோன்றும். இச்செயலை எப்படி செய்வது? என்னென்ன முறைகளைக்கையாளுவது? விளைவுகள் எவ்வாறு இருக்கும்? என்பனபோன்ற எண்ணங்கள் வரும். பெற்றொரோ மற்றொரோ கண்டிக்காத வரை ஒரு குழந்தைக்கு எவ்வித அச்சமும் தயக்கமும் எக்காரியத்தைச் செய்யும்போதும் ஏற்படுவதில்லை. அச்செயல்களில் தோன்றிய விளைவுகளின் அனுபவம் மூலமாகவே அக்குழந்தை அதேசெயலை மீண்டும் செய்யவோ, செய்யாமல் இருக்கவோ தீர்மானிக்கிறது. […]