திருப்பாவை – பாசுரம் 28

12/01/2021 Sujatha Kameswaran 0

  திருப்பாவை கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்; அறிவொன்று மில்லாத ஆய்க்குலத்து உன்தன்மைப் பிறவிப் பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்; குறைவொன்று மில்லாத கோவிந்தா! உன்தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது! அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச் சிறுபேர ழைத்தனவும் சீறி யருளாதே, இறைவா, நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்! – ஆண்டாள்

திருப்பாவை – பாசுரம் 26

10/01/2021 Sujatha Kameswaran 0

திருப்பாவை மாலே! மணிவண்ணா! மார்கழி நீராடுவான் மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல் ஞாலத்தை எல்லாம் நடுங்குமுரல்வன பாலன்ன வண்ணத்துள் பாஞ்சசன்னியமே போல்வன சங்கங்கள் போய்ப்பாடுடையனவே, சாலப்பெரும் பறையே, பல்லாண்டிசைப்பாரே, கோல விளக்கே, கொடியே, விதானமே, ஆலின் இலையாய்! அருளேலோர் எம்பாவாய்! – ஆண்டாள்

திருப்பாவை – பாசுரம் 25

09/01/2021 Sujatha Kameswaran 0

திருப்பாவை ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர, தரிக்கிலானாகித் தான் தீங்கு நினைந்த கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை அருத்தித்து வந்தோம்; பறைதருதி யாகில் திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி வருத்தமுந்தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்! – ஆண்டாள்

திருப்பாவை – பாசுரம் 22

06/01/2021 Sujatha Kameswaran 0

திருப்பாவை அங்கண் மாஞாலத்தரசர் அபிமான பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட்டிற்கீழே சங்கமிருப்பார்போல் வந்துதலைப் பெய்தோம்; கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப்போலே, செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ? திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற் போல், அங்கணிரண்டும் கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல் எங்கள்மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்! – ஆண்டாள்

திருப்பாவை – பாசுரம் 20

04/01/2021 Sujatha Kameswaran 0

திருப்பாவை முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்; செப்பம் உடையாய்! திறலுடையாய்! செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்; செப்பன்ன மென்முலை செவ்வாய் சிறுமருங்குல் நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்; உக்கமும் தட்டொளியும் தந்துஉன் மணாளனை இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்! – ஆண்டாள் முப்பத்து மூன்று கோடி தேவர்கள் இருந்தாலும், அவர்களுக்கெல்லாம் முன்னதாகச் சென்று பக்தர்களின் துயர் துடைக்கும் கலியுக தெய்வமே! நீ எழுவாயாக! […]

திருவெம்பாவை – பாசுரம் 17

01/01/2021 Sujatha Kameswaran 0

திருவெம்பாவை – பாசுரம் – 17 செங்கண் அவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்எங்கும் இலாதோர் இன்பம் நம்பாலதாக்கொங்கு உண் கருங்குழலி நந்தம்மை கோதாட்டிஇங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனைஅங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதைநங்கள் பெருமானைப் பாடி நலம் திகழ்ந்பங்கயப் பூம்புனல் பாய்ந்தாடேலோர் எம்பாவாய். விளக்கம் : மணம் பொருந்திய கரிய கூந்தலை உடைய பெண்ணே! சிவந்த கண்களையுடைய திருமாலிடத்தும், நான்முகனிடத்தும், பிற தேவர்களிடத்தும், எங்கும் மற்றவர்களிடத்தும் இல்லாததாகிய, […]

திருப்பாவை – பாசுரம் 17

01/01/2021 Sujatha Kameswaran 0

திருப்பாவை அம்பரமே, தண்ணீரே, சோறே அறஞ்செய்யும் எம்பெருமான்! நந்தகோ பாலா! எழுந்திராய்; கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே! குலவிளக்கே! எம்பெருமாட்டி! யசோதாய்! அறிவுறாய்; அம்பரம் ஊடறுத் தோங்கி உலகளந்த உம்பர்கோ மானே! உறங்காது எழுந்திராய்; செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா! உம்பியும் நீயும் உறங்கேலோர் எம்பாவாய்! – ஆண்டாள்   விளக்கம்: எங்களுடைய தலைவனாய் இருக்கிற நந்தகோபனின் திருமாளிகையை பாதுகாக்கும் காவலனே! கொடித் தோரணம் கட்டப்பட்ட வாசல் காவலனே! ஆயர்குல சிறுமியரான […]

திருப்பாவை – பாசுரம் 12

27/12/2020 Sujatha Kameswaran 0

திருப்பாவை கனைத்து இளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கிநினைத்து முலை வழியே நின்று பால் சோரநனைத்து இல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்பனித் தலை வீழ நின்வாசற் கடைபற்றிச்சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்றமனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய்திறவாய்இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேர் உறக்கம்அனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்!  – ஆண்டாள்

திருவெம்பாவை – பாசுரம் 11

26/12/2020 Sujatha Kameswaran 0

திருவெம்பாவை – பாசுரம் 11 மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேர் என்னக்கையால் குடைந்து குடைந்து உன் கழல்பாடிஐயா வழியடியோம் வாழ்ந்தோம் காண்ஆரழல் போல் செய்யா! வெண்ணீறு ஆடி! செல்வா!சிறு மருங்குல் மையார் தடங்கண் மடந்தை மணவாளா!ஐயா! நீ ஆட்கொண்டருளும் விளையாட்டில்உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்எய்யாமல் காப்பாய் எமையேலோர் எம்பாவாய். – மாணிக்கவாசகர். விளக்கம் : சிவபெருமானே! உன் அடியவர்களான நாங்கள் வண்டுகள் மொய்க்கும் மலர்களைக் கொண்ட குளத்தில், ‘முகேர்’ […]

திருப்பாவை – பாசுரம் 10

25/12/2020 Sujatha Kameswaran 0

திருப்பாவை – பாசுரம் 10 நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்! மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்? நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால் போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள் கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகரணனும் தோற்றம் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ? ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே! தேற்றமாய் வந்து திறவேலார் எம்பாவாய்! – ஆண்டாள்

1 2