ஆசாரக் கோவை

19/04/2023 Sujatha Kameswaran 0

ஆசாரக்கோவை என்னும் இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுல் ஒன்றாகும். இந்நூலில் ஆசிரியர் வண்கயத்தூர் என்ற ஊரில் வாழ்ந்த பெருவாயின் முள்ளியார். இந்த நூலின் மூலநூல் ‘ஆரிடம்’ என்னும் வடமொழி நூலாகும். இதில் உள்ள ஆசாரங்கள் ‘சுக்ர ஸ்மிருதி’ எனும் நூலில் உள்ளவை ஆகும். நல்லொழுக்கம் ஒழுக்கம் தவறாதவர் அடையும் நன்மைகள் ஒருமனதோடு செய்யவேண்டியவை விடியற்காலையில் செய்யவேண்டியவை எச்சிலுடன் தொடக்கூடாதவை காணக்கூடாதவை நால்வகை எச்சில் எச்சிலுடன் செய்யக்கூடாதவை காலை மற்றும் மாலையில் கடவுளை […]

பரதநாட்டியம்

03/04/2018 Sujatha Kameswaran 0

இசைத்துறை சார்ந்த கலைகளில் ஓர் அற்புதமான கலை நமது பரதநாட்டியம். மற்ற அனைத்து இசை சார்ந்த கலைகளிலும், சில உறுப்புகளின் ஒத்துழைப்பு இருந்தாலே போதுமானது. ஆனால் பரதநாட்டியத்தில் வெளிஉறுப்புகள் மட்டுமல்லாது, எண்ணமும் ஒரே சித்தமாய் ஒரே பாதையில் அமையவேண்டும். பாட்டின் தன்மைக்கேற்ப முகம் சிறந்த உணர்ச்சிகளையும், கைகள் மற்றும் கால்கள் பாடலுக்கேற்ற அபிநயத்தையும், காட்டவேண்டுமானால் எண்ணமும் அப்பாட்டிற்கேற்பவே பயணிக்கவேண்டும். இவ்வாறு அனைத்தையும் ஒருங்கிணைத்து செய்தாலே இக்கலை பரிபூரணமாகும். சரியாக சொல்வதானால் […]

கொன்றை வேந்தன்

27/05/2016 Sujatha Kameswaran 2

கொன்றை வேந்தன் 66. பேதைமை என்பது மாதர்க்கு அணிகலம். அறிந்தும் அறியாததுபோல் அடங்கி நடப்பதே, பெண்களுக்கு சிறந்த அணிகலனாகும். 67. பையச் சென்றால் வையம் தாங்கும். ஒருவர் கோபமடையாமல், பொறுமையுடன் செயல்பட்டால், அவரை இவ்வுலகம் போற்றும்.

கொன்றை வேந்தன்

15/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 42. தூற்றும் பெண்டிர் கூற்றெனத் தகும். கணவனைப் பற்றி அவதூறு பேசும் பெண்ணை, அக்குடும்பத்தின் எமன் என்று எனலாம். 43. தெய்வம் சீறின் கைதவம் மாளும். தெய்வத்தின் கோபத்திற்கு ஆளானால், முன்னர் தவம் செய்து பெற்ற புண்ணியம் அனைத்தும் அழிந்துபோகும்.

கொன்றை வேந்தன்

14/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 40. தீராக் கோபம் போராய் முடியும். நீங்காத பெருங்கோபம், இறுதியில் பெரும் போர் ஏற்படச்செய்யும். 41. துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு. கணவனின் துன்பம் கண்டு துடிக்காத பெண், அடிவயிற்றில் கட்டிய நெருப்பைப் போன்றவளாவாள்.

கொன்றை வேந்தன்

29/04/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 10. ஒருவனைப் பற்றி ஓரகத் திரு. பெண்ணானவள், நல்ல ஆண் ஒருவனைத் தேர்ந்தெடுத்து, அவனுடன் ஓரே வீட்டில் இன்பமாய் வாழவேண்டும். 11. ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம். வேதங்களை நன்கு ஓதுவதே, அந்தணர்களுக்கு மிகச்சிறந்த ஒழுக்கமாகும்.