ஜனநாயகம்

18/04/2019 Sujatha Kameswaran 0

அனைவருக்கும் உண்டு ஜனநாயகக் கடமை. தனிமனித ஒழுக்கத்தை அடித்தளமாகக்கொண்டது இது. மனித உணர்வுகளை மதிக்கத்தெரிந்ததை வெளிப்படுத்த கிடைக்கும் வாய்ப்பு. மேலும் தான் யார் என்பதை உணர்ந்து, பிறருக்கும் உணர்த்த ஏதுவாய் அமையும் தருணம். தெளிவான எண்ணத்துடன், பல்வேறு விஷயங்களை அலசி ஆராய்ந்து திடமான முடிவினை எடுக்கும் திறன் இவைகளை அறிய உதவும் தருணம் ஜனநாயகக் கடமையை ஆற்றும்போது ஏற்படும். வாழ்க ஜனநாயகம் ! வாழ்க ஜனங்களின் கடமை உணர்வு !