கலி காலம்
புராணங்களின் மூலமாக கலியுகம் அதாவது கலிகாலம் எவ்வாறு இருக்கும் என்பதைப் பற்றியத் தகவல்களை தெரிந்துகொள்வோம். கலியுகத்தில் நிகழக்கூடியதை காகபுஜண்டர் கருடனுக்குக் கூறியதாக சில விவரங்கள் ராமாயணத்தில் உத்திரகாண்டத்தில் விளக்கப்பட்டுள்ளது. அவை, கலியுகத்தில் மக்களுக்கு மனம்போனபடி நடப்பதே மார்க்கம் என்றாகிவிடும். தங்கள் லாபத்துக்காக மக்களுக்கு பலவிதமான நெறிமுறைகளை எடுத்துச்சொல்லும் புனித நூல்கள் மறைக்கப்படும். தர்மசெயல்கள் எல்லாம் பேராசையாலும், தீய தூண்டுதல்களாலும் மாற்றப்படும். தற்பெருமை, சுய விளம்பரம் தேடுபவர்கள் அறிஞர்கள் என்று போற்றப்படுவர். […]