பஜகோவிந்தம் – 31
பஜகோவிந்தம் – 31 குருவின் திருவடிகளே சரணம்: குரு சரணாம்புஜ நிர்ப்பர பக்த:ஸம்ஸாராத் அசிராத் பவமுக்த: |ஸேந்த்ரிய மானஸ நியமாத் ஏவம்த்ரக்ஷ்யஸி நிஜ ஹ்ருதயஸ்த்தம் தேவம் || பதவுரை: குரு சரணாம்புஜ – குருவினுடைய திருவடிக் […]
பஜகோவிந்தம் – 31 குருவின் திருவடிகளே சரணம்: குரு சரணாம்புஜ நிர்ப்பர பக்த:ஸம்ஸாராத் அசிராத் பவமுக்த: |ஸேந்த்ரிய மானஸ நியமாத் ஏவம்த்ரக்ஷ்யஸி நிஜ ஹ்ருதயஸ்த்தம் தேவம் || பதவுரை: குரு சரணாம்புஜ – குருவினுடைய திருவடிக் […]
விடுகதையா இந்த வாழ்க்கை?! ஏன்? எதற்கு? என்கிற கேள்விகளைக்கொண்டும், ஆனால் அவற்றிற்கு பதில்கள் சரியானபடி இல்லாமல் அமைந்திருக்கின்றது இவ்வாழ்க்கை. விடைக்காணமுடியா விசித்திரமான புதிர், இந்த வாழ்க்கை. மற்றவருக்கு நடக்கும் ஒவ்வொரு விஷயங்களுக்கும், அடுத்தடுத்து என்ன செய்யவேண்டும் என்றும், நடந்து முடிந்த நிகழ்ச்சியானால் அதனை எவ்வாறு சிறப்பாகச் செய்திருக்காலாமென்றும் நமக்கு சரியாகத் தெரிகின்றது. ஆனால், அவை நமக்கு என வரும்போது, தக்க சமயத்தில், நம் புத்தி, உணர்ச்சி இவைகள் தக்கவாறு […]
கொன்றை வேந்தன் 90. ஒத்த இடத்து நித்திரை செய். மேடு பள்ளம் ஏதும் இல்லாத சமதள இடத்தில் உறங்கவேண்டும். 91. ஓதாதார்க்கு இல்லை உணர்வொடும் ஒழுக்கம். அறம் கூறும் நூல்களைப் படித்தறியாதவர்களிடம் நல்ல சிந்தனை, ஒழுக்கமான செயல்கள் இருக்காது.
எண்ணங்கள் வண்ணங்கள் திட்டப்பட்டியல்: இலக்கை அடைய, நிச்சயமான விருப்பத்தை நிர்ணயித்துக்கொள்ளவேண்டும். நம்மேல் முழு நம்பிக்கை வைக்கவேண்டும். நம் குறிக்கோளினால் ஏற்படும் நன்மைகளையும் தீமைகளையும் பட்டியலிட்டுக்கொள்ளவேண்டும். தடைகளை அறிந்துக்கொண்டு அவற்றை நீக்க அல்லது கடந்து வர வழிமுறைகளை வகுக்கவேண்டும். இலக்கை சார்ந்த தற்போதைய நிலவரத்தையும், எதிர்கால வளர்ச்சிக்குத் தேவைப்படும் வளர்ச்சி குறித்தும் கணித்தல் மிக அவசியம். தேவையான மற்ற காரணிகளை, உதவிகளை மற்றும் ஒத்துழைப்பை பட்டியலிடல். இலக்கை நோக்கிய செயல்முறை திட்டமிடல் சாலச்சிறந்தது. குறிக்கோளை அடைய காலவரையறை நிர்ணயத்துக்கொள்ளவேண்டும். மனக்கண்ணோட்டத்தில் […]
எண்ணங்கள் வண்ணங்கள் குறிப்பெடுத்தலும் திட்டமிடலும்: எந்தவொரு சிறப்பான செயலும், சிறப்பாய் நடந்தேற, அதற்குத் தேவையானவற்றைக் குறிப்பெடுத்துக்கொள்ளுதல் சிறந்த வழிமுறையாகும். பொதுவாக எங்காவது பயணம் மேற்கொள்வதானால், அப்பயணத்திற்குத் தேவையானவை எவை எவை என குறிப்பெடுத்துக்கொண்டு,(check list) அப்பொருட்களை சேகரித்துக்கொண்டு, முடிவில் ஒருமுறை அக்குறிப்பை வைத்துக்கொண்டு, சரிபார்த்துக்கொள்வதன் மூலம், பயணம் இனிதாய் அமையும். பயணத்திற்கே திட்டமிடல், குறிப்பெடுத்தல் அவசியம் எனில், இலட்சியத்தை அடைய, நிச்சயம், நன்றாக, தீவிரமாக குறிப்பெடுத்தல் மிகத்தேவையானது. எண்ணங்கள் தொடரும்… […]
எண்ணங்கள் வண்ணங்கள் செயல்படுத்தலின் செயல்முறைகள்: முதலில் இலட்சியத்தை சரிவர வரையறுத்துக் கொள்ளவேண்டும். பின்பு, அதனை அடைய என்னென்ன வழிமுறைகள் உள்ளன என்பதனைத் தெளிவுபடுத்திக்கொள்ளவேண்டும். இவற்றிற்கான சாத்தியக்கூறுகளை, கணித்துக்கொள்வதுடன், செய்யவேண்டிய செலவுகள் மற்றும், அதற்குத்தேவையான மற்ற காரணிகளையும் முன்னமே திட்டமிட்டுக்கொள்வது நல்லது. “துணைநலம் ஆக்கம் தரூஉம் வினைநலம் வேண்டிய எல்லாம் தரும்”. (குறள்- 651) ஒருவருக்குக் கிடைக்கும் துணைவர்களால் வலிமை பெருகும், செயல் சுத்தமோ நாம் விரும்பிய எல்லாவற்றையும் தரும், என […]
எண்ணங்கள் வண்ணங்கள் இலட்சியத்தை தீர்மானித்தல்: இலட்சியம் எதுவென்று நிச்சயமானால், அதனை அடையும் வழிமுறைகளும் எளிதாகும். இலட்சியத்தை நிர்ணயிக்க சிலவற்றை நெறிபடுத்திக்கொள்ளவேண்டும். அவை, 1. சுய விருப்பம், மற்றும் திறமையை அறிதல். 2. மற்றவர் வழிகாட்டுதல் இருக்கலாம், ஆனால் மற்றவர்களையே பின்பற்றக்கூடாது. அதாவது, மற்றவர்களுக்காக நாம் வாழலாம், ஆனால் மற்றவர் வாழ்க்கையை நாம் வாழமுடியாது. 3. இலட்சியத்தை அடைய, செய்யவேண்டிய செயல்களையும், அதற்கான செலவுகளையும் திட்டமிடவேண்டும். 4. நம் இலட்சியத்தின் எதிர்கால […]
எண்ணங்கள் வண்ணங்கள் ஆழ்மன ஆற்றல்: இறைவன் படைத்த அற்புதபடைப்புக்களில் ஒன்றான மனிதரின் ஆற்றலில், ஆழ்மன ஆற்றல் என்பது மிகவும் சக்திவாய்ந்ததாகும். ஆழ்மனத்தில் பதிந்த எந்தவொரு பதிவும், காலத்திற்கும் அழிவதில்லை. பத்துவயதிற்குள் இருக்கும் குழந்தைகளுக்கு, அவ்வயதிற்குள், அவர்தம் மனதில் பதியும் எண்ணங்கள் அனைத்தும், அவர்களை ஏதேனும் ஒர் விதத்தில் தொடர்ந்துவரும். அவ்வயதிற்குள் அமையும் சூழலும், ஏற்படும் பழக்கமும், கற்றுக்கொள்பவைகளும், தெரிந்துக்கொள்பவைகளுமே என்றென்றிற்கும் இருக்கும், அவர்களது அடிப்படைத் தன்மைகளாய் அமையும். வெளியில் பெரும் […]
எண்ணங்கள் வண்ணங்கள் இச்சையும் அனிச்சையும்: பெரும்பாலன செயல்கள் இச்சையின் காரணமாகவே நிகழ்கின்றன. உதாரணமாக சாப்பிடுவது, விதவிதமாய் உடுத்துவது, வெளியில் எங்காவது செல்வது, படிப்பது, எழுதுவது, ஏதேனும் செயல்புரிவது, உறங்குவது, போன்ற பல செயல்கள் நமது விருப்பத்தால் நடைபெறுவதாகும். எனினும், செயல்புரிந்து ஏற்பட்ட பழக்கம் காரணமாக, இவற்றில் பல வெகுவிரைவில் அனிச்சை செயல்களாகின்றன. அதாவது நம் புத்தியின் கட்டளை இல்லாமலேயே நடைபெறுகின்றன. முதலில் நாமாக சாப்பிடும் போது, என்ன உணவு உள்ளதோ […]
எண்ணங்கள் வண்ணங்கள் திடமுடிவும், விடாமுயற்சியும்: எதை செய்யவேண்டும், எதற்காக செய்யவேண்டும், எவ்வாறு செய்யவேண்டும் என்ற தெளிவுடன் செயல்களை ஆரம்பிக்கவேண்டும். நமது செயல்கள் பற்றிய எண்ணங்களும் அதற்கான தீர்கமான முடிவும், நமதாக இருக்கும் பட்சத்தில், எவ்வித இடையூறுகள் ஏற்பட்டாலும், அவற்றை சரிசெய்ய நம்மால் இயலும். எண்ணியமுடிதல் வேண்டும், நல்லன எண்ணவேண்டும், என்பதுடன், திண்ணிய நெஞ்சமும் வேண்டும். தீர்கமான முடிவுடன், செயலைத்தொடங்கி, விடாமுயற்சியுடன் செயல்பட்டால் செயல்கள் தாமதமாகமல் விரைவில் நிறைவுறும். எண்ணங்கள் தொடரும்…
Copyright © 2024 | WordPress Theme by MH Themes