திருப்பாவை – பாசுரம் 7

22/12/2020 Sujatha Kameswaran 0

திருப்பாவை – பாசுரம் 7 கீசுகீ சென்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்துபேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே!காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்துவாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்ஓசைபடுத்தத் தயிரரவம் கேட்டிலையோ?நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்திகேசவனைப் பாடவும்நீ கேட்டே கிடத்தியோ?தேசமுடையாய்! திறவேலோர் எம்பாவாய்! – ஆண்டாள்

திருப்பாவை – பாசுரம் 6

21/12/2020 Sujatha Kameswaran 0

திருப்பாவை – பாசுரம் 6 புள்ளும் சிலம்பினகாண்; புள்ளரையன் கோயிலில்வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?பிள்ளாய்! எழுந்திராய், பேய்முலை நஞ்சுண்டுகள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சிவெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினைஉள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்உள்ளம்புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்! – ஆண்டாள்

திருப்பாவை

20/12/2020 Sujatha Kameswaran 0

திருப்பாவை – பாசுரம் 5 மாயனை மன்னுவடமதுரை மைந்தனைத்தூய பெருநீர் யமுனைத் துறைவனைஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத்தாயைக் குடல்விளக்கம் செய்ததாமோதரனைத்தூயோமாய் வந்துநாம் தூமலர் தூவித்தொழுதுவாயினாற்பாடி மனத்தினால் சிந்திக்கப்போயபிழையும் புகுதருவான் நின்றனவும்தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்! – ஆண்டாள்

திருப்பாவை

19/12/2020 Sujatha Kameswaran 0

திருப்பாவை – பாசுரம் 4 ஆழிமழைக்கண்ணா ஒன்றுநீ கைகரவேல்ஆழியுட்புக்கு முகந்து கொடார்த்தேறிஊழி முதல்வனுருவம்போல் மெய்கறுத்துப்பாழியந் தோளுடைப் பற்பநாபன் கையில்ஆழிபோல் மின்னிவலம்புரிபோல் நின்றதிர்ந்துதாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல்வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்! – ஆண்டாள்

திருப்பாவை

18/12/2020 Sujatha Kameswaran 0

திருப்பாவை – பாசுரம் 3 ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால் தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து ஓங்குபெரும் செந்நெல் ஊடு கயலுகள பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத் தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள் நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்! – ஆண்டாள்

திருப்பாவை

17/12/2020 Sujatha Kameswaran 0

திருப்பாவை – பாசுரம் 2 வையத்து வாழ்வீர்காள் நாமும்நம் பாவைக்குச்செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்பையத்துயின்ற பரமனடி பாடிநெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடிமையிட்டெழுதோம் மலரிட்டுநாம் முடியோம்செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டிஉய்யுமாறு எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்! – ஆண்டாள்

திருப்பாவை

16/12/2020 Sujatha Kameswaran 0

திருப்பாவைபாசுரம் – 1 மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச்சிறுமீர்காள்!கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்நாராயணனே, நமக்கே பறைதருவான்,பாரோர் புகழப் படிந்தேலோ எம்பாவாய்! – ஆண்டாள்

1 2 3