தனித்துவம்

13/07/2019 Sujatha Kameswaran 0

உலகில் உள்ள அனைவருக்கும் தனித்தன்மை உண்டு. அதுவே அவர்களின் தனித்துவம்.  இரட்டையர்களானாலும் அவர்கள் இருவருக்கும் தனித்தனியே சில திறமைகள், செயல்பாடுகள் இருக்கும். தனித்துவமும் ஒரு தத்துவமே. நமது தனித்துவத்தை – தனித்திறமையை நாமே உணரமுடியும். நமது தனித்திறமையை எவ்வாறு அறிவது? மிகவும் எளிய வழியில் நம்மாலேயே உணரமுடியும். அதாவது, நமக்கு இயல்பாகவும், எளிதாகவும் எவ்வெவற்றையெல்லாம்  செய்ய முடிகிறதோ அவ்வவற்றின் மூலமாக நமது தனித்திறனை நமது செயல்திறன்கள் மூலம் அறியலாம். ஒவ்வொரு வெற்றியாளரும் […]

எண்ணங்கள் வண்ணங்கள்

19/04/2016 Sujatha Kameswaran 0

எண்ணங்கள் வண்ணங்கள் வெற்றியின் தடங்கல்: செயல்களில் வெற்றிகொள்ள, மேற்கொள்ளப்படும் உக்திகள், பின்பற்றப்படும் நடைமுறைகள் போன்றவைகள் மட்டுமல்லாமல், செயல்கள் குறித்த விமர்சனங்கள் மிகவும் முக்கியமானவை. மோசமான விமர்சனகள், செயல்களை தடைபடுத்தி, வெற்றிக்குப் பெருங்தடங்கலாய் அமையும். எதிர்பாராதவர்களிடமிருந்து கிடைக்கும் சாதாரண விமர்சனமும் ஒருவித உற்சாகத்தை அளிக்கும். அதேசமயம் நாம் எதிர்பார்ப்பவரிடமிருந்து வராத சாதாரண விமர்சனமும் நம்மை சலிப்படைய செய்யலாம். ஒவ்வொரு விமர்சனமும் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்தும். இக்காரணத்தினாலேயேதான், தற்பொழுது உலகில் பெரும்பாலானோர் Facebook, […]

எண்ணங்கள் வண்ணங்கள்

17/04/2016 Sujatha Kameswaran 0

எண்ணங்கள் வண்ணங்கள் வெற்றிகுறித்த மனநிலை: என்ன நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய் என்ற வாக்கின்படி, நாம் எதைக்குறித்து அதிகமாக நினைக்கிறோமோ அதன் சாயல் நம்மிடம் தோன்றும். எனவே நாம் புரியவேண்டிய செயல்கள் பற்றிய அறிவுடன் நம் சிந்தனைகளை அச்செயல்களைக் குறித்து ஒருமுகப்படுத்தவேண்டும். செய்யவேண்டியவைக்குறித்த மனத்தெளிவும், மனத்துணிவும், நம்மை இலக்கின் அடுத்தகட்டத்திற்கு கொண்டுசென்றுவிடும். லட்சியப்பாதையில் மனதை நீடிக்கசெய்வதே முதல் காரியம். உடலும், மனமும் ஒருங்கிணைந்து செயல்படும்போது, பலன் விரைவில் கிட்டும். நமது விருப்பம், […]

எண்ணங்கள் வண்ணங்கள்

16/04/2016 Sujatha Kameswaran 0

எண்ணங்கள் வண்ணங்கள் வெற்றியடைய வழிகள்: அனைவரின் எண்ணமும் எடுத்த காரியத்தில் வெற்றியடைய வேண்டும் என்பதுதான். யாரும் தோற்கவிரும்புவதில்லை. வெற்றி என்பது செய்யும் வேலையின் அல்லது எடுத்த செயலில் எதிர்நோக்கிய பலனை அல்லது அடையவேண்டிய இலக்கை மனநிறைவுடன் அடைவது எனலாம். வெற்றியடைய சில வழிமுறைகள் உள்ளன. தேர்ந்தெடுக்கும் செயலைப்பற்றிய அறிவு, அதனை செய்யவேண்டிய முறைகளைப்பற்றிய தெளிவு, அனுபவ அறிவு, ஏற்ற இறக்கங்களை சந்திக்கும் துணிவு, பிரச்சனைகளை எதிர்கொள்ள பக்குவம், கடினப்பாதைகளை கடந்துவர […]