தெய்வச் சிலைகள்

02/11/2016 Sujatha Kameswaran 1

தெய்வச்சிலைகள்-தெய்வீகச்சிலைகள் இந்தியத் திருநாட்டின் பாரம்பரியமிக்க பல விஷயங்களில் தெய்வச் சிலைகள் பெரும் சிறப்புகள் வாய்ந்தவைகளாகத் திகழ்கின்றன. ஒளி வடிவான இறைவனுக்கு பக்தர்கள் தங்கள் கற்பனைத் திறனாலும், தெய்வத்துடன் நெருக்கமான உணர்வு வேண்டும் என்பதாலும் உருவ அமைப்பை ஏற்படுத்தினர். ஆதி மனிதர்கள் முதலில் இயற்கையையே தெய்வமாக வழிபட்டனர் என்பதனை வரலாற்றின் மூலம் அறியலாம். சூரியன், அக்னி(நெருப்பு), காற்று, மலை, நீர், பூமி ஆகிய இயற்கையை வழிபட்ட மக்கள், தங்கள் வழிபாட்டின் அடுத்த […]

விடுகதையா இந்த வாழ்க்கை? இளம்பருவம்

20/10/2016 Sujatha Kameswaran 0

இளம் பருவம் வாழ்க்கைச் சக்கரத்தின் ஒவ்வொரு நிலையும், அழகானது, இனிமையானது மற்றும் வியப்பானது. இவற்றில் இளம்பருவம் என்பது மிகவும் வியப்பானது, சிலநேரங்களில் அபாயகரமானதும், மொத்தத்தில் அவ்விளம்பிராயத்தினருக்கும் அவர்களைச் சுற்றியுள்ளோருக்கும் பெரும் சவாலான பருவம் அது. இப்பருவத்தில் உள்ளோரை அவரைச்சார்ந்தோர் புரிந்துகொண்டு, அனுசரித்து, அரவணைத்துச் சென்றால் இந்நிலையை இனிதே கடக்கலாம். மற்றவர்கள் நம்மைப்புரிந்து கொள்ளவில்லை என்ற எண்ணம் இளம்பருவத்தினரிடம் ஓங்கி நிற்கிறது. இவ்வயதினரின் கருத்துக்களை முதலில் கேட்டு பின்பு அதில் உள்ள […]