திருப்பாவை – பாசுரம் 15

30/12/2020 Sujatha Kameswaran 0

திருப்பாவை எல்லே இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ? சில்லென்றழையேன்மின், நங்கைமீர்! போதர்கின்றேன்; ‘வல்லை, உன் கட்டுரைகள்! பண்டேஉன் வாயறிதும்!’ ‘வல்லீர்கள் நீங்களே, நானேதான் ஆயிடுக!’ ‘ஒல்லைநீ போதாய், உனக்கென்ன வேறுடையை?’ ‘எல்லோரும் போந்தாரோ?’ ‘போந்தார், போந்து எண்ணிக்கொள்’ வல்லானை கொன்றானை, மாற்றாரை மாற்றழிக்க வல்லானை, மாயனைப் பாடேலோர் எம்பாவாய்! – ஆண்டாள்

திருவெம்பாவை – பாசுரம் 7

22/12/2020 Sujatha Kameswaran 0

திருவெம்பாவை – பாசுரம் 7 அன்னே இறையும் சிலவோ பல அமரர்உன்னற்கரியான் ஒருவன் இருஞ்சீரான்சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய்தென்னா என்னா முன்னம் தீசேர் மெழுகொப்பாய்என்னானை என்னரையன் இன்னமுதென்றெல்லாமும்சொன்னோம்கேள் வெவ்வேறாய் இன்னந்துயிலுதியோவன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்! – மாணிக்கவாசகர் விளக்கம் : தாயினும் மேலான பெண்ணே! உனது சிறப்புத்தன்மைகளில் இந்த தூக்கமும் ஒன்றோ? தேவர்களால் சிந்திப்பதற்கும் அரியவன் என்றும், மிகுந்த புகழுடையவன் என்றும், சிவனுக்குரிய திருநீறு, ருத்ராட்சம் […]

திருவெம்பாவை – பாசுரம் 4

19/12/2020 Sujatha Kameswaran 0

திருவெம்பாவை – பாசுரம் 4 ஒள் நித்தில நகையாய் இன்னம் புலர்ந்தின்றோ?வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ?எண்ணிக்கொடு உள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்கண்ணைத் துயின்று அவமே காலத்தைப் போக்காதேவிண்ணுக்கொரு மருந்தை வேத விழுப்பொருளைக்கண்ணுக்கு இனியானைப் பாடிக் கசிந்துள்ளம்உள்நெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயேவந்துஎண்ணிக் குறையில் துயில் ஏலோர் எம்பாவாய்! – மாணிக்கவாசகர்   விளக்கம் :      (வந்தவர்கள் உறங்கியவளை எழுப்பி)      ஒளி வீசும் முத்துக்கள் போன்ற பற்களை உடையவளே! […]

மௌனம்

10/02/2020 Sujatha Kameswaran 0

மௌனம் என்பது மிகவும் மகத்துவமானது. வார்த்தைகளோ செய்கைகளோ ஏதும் இல்லாமல் அர்த்தத்தையும், கம்பீரத்தையும், பயத்தையும், எதிர்ப்பையும், துக்கத்தையும், ஆனந்தத்தையும், அவமானத்தையும் வெளிப்படுத்த சிறந்ததொரு உபாயம். பல நேரங்களில் வார்த்தைகள் விவாதத்தை வளர்க்கும். ஆனால் மௌனமோ அனைவரையும்…. அனைத்தையும்… யோசிக்கவைக்கும். இலக்கை அடைவதற்காக மனதையும் செயல்களையும் ஒருமுகப்படுத்தும் போது மௌனம் சக்தி தீவிரமாகப்போராடும் போது மௌனம் வலிமை. கற்ற வித்தையைக் கையாளும்போது மௌனம் பெருமிதம். எதிர்ப்பாராத தருணத்தில் நமக்குரிய பாராட்டையும் பரிசையும் […]

கொன்றை வேந்தன்

08/06/2016 Sujatha Kameswaran 2

கொன்றை வேந்தன் 90. ஒத்த இடத்து நித்திரை செய். மேடு பள்ளம் ஏதும் இல்லாத சமதள இடத்தில் உறங்கவேண்டும். 91. ஓதாதார்க்கு இல்லை உணர்வொடும் ஒழுக்கம். அறம் கூறும் நூல்களைப் படித்தறியாதவர்களிடம் நல்ல சிந்தனை, ஒழுக்கமான செயல்கள் இருக்காது.

கொன்றை வேந்தன்

01/06/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 76. மெத்தையில் படுத்தல் நித்திரைக்கு அழகு. இலவம் பஞ்சு மெத்தையில் உறங்குவது ஆழ்ந்த உறக்கத்தையும், ஆரோக்கியத்தையும் தரும். 77. மேழிச் செல்வம்படாது. உழவுத் தொழிலால் வரும் செல்வம் ஒருநாளும் அழிந்து போகாது.

கொன்றை வேந்தன்

10/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 32. செய்தவம் முதிர்ந்தால் கைதவம் மாளும். தவவாழ்க்கை முதிர்ச்சியடைந்தால், துன்பங்கள் விலகிவிடும். 33. சேமம் புகினும் யாமத்து உறங்கு. காவல் பணி புரிபவராயினும், நடு இரவில் சிறிது நேரமாவது உறங்க வேண்டும்.