உடற்பயிற்சி / உள்ளப்பயிற்சி

28/08/2017 Sujatha Kameswaran 2

  முற்கால மனிதர்கள், தங்கள் வாழ்க்கையை சிறப்பாக முறைபடுத்திக் கொண்டனர். காலையில் எழுவது முதல், இரவு உறங்கும் வரையில் அவர்கள் கடைபிடித்த அனைத்து விஷயங்களுமே பெரும்பாலும் அவர்தம் உடலுக்கும் உள்ளத்திற்கும் நலம்பயப்பதாகவே அமைந்தது. அதிகாலையில் எழுதல் (இன்று, அதிகாலை நேர வேலை என்றால் ஒழிய பெரும்பாலோர் எழுவதில்லை). பல்தேய்க்க வேப்பங்குச்சி அல்லது ஆலங்குச்சியை உபயோகித்தல். பல்வலி எனில் லவங்கம், உப்பு என இயற்கை முறை வைத்தியத்தையே மேற்கொள்ளல். (இன்று அவை […]

இந்தியாவின் நிலை?!

27/04/2017 Sujatha Kameswaran 0

விளைப்பொருட்களின் பயன்பாடுதான் இப்படி என்றால், மனித வளம் பெரும்பாலும் இழிவு மற்றும் கொச்சைப்படுத்தப்படுகிறது. கூலித்தொழிலாளி முதல் குபேரன் வரை தன்னைத்தானே ஏமாற்றிக்கொண்டும் மற்றவர்களை ஏமாற்றிக்கொண்டும் வாழ்கின்றனர். இதனாலேயே தனிமனித உழைப்பும், மரியாதையும் இல்லாமல் முகத்தின் முன்னால் ஒன்றும், முதுகின் பின்னால் மற்றொன்றும் நிகழ்கின்றன. சிறு பொருட்கள் முதல் மிகப்பெரிய பொருட்கள் வரை தரம் குறைவாகவும் சிறு தொழில் முதல் பெரிய தொழில்கள் வரை அனைத்திலும் பெரும்பாலும் தரம் குறைவு. பணம் […]

கொன்றை வேந்தன்

02/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 16. கிட்டாதாயின் வெட்டென மற. நாம் விரும்பியது கிடைக்கவில்லையெனில் அதனை உடனடியாக மறந்துவிடவேண்டும். 17. கீழோர் ஆயினும் தாழ உரை. நம்மைவிட எளியோர்கள் எனினும், அவர்களிடம் மரியாதையோடு பேச வேண்டும்.

எண்ணங்கள் வண்ணங்கள்

11/04/2016 Sujatha Kameswaran 0

மனதில் உறுதி வேண்டும், வாக்கினிலே இனிமை வேண்டும். – மகாகவி பாரதியார் எண்ணங்கள் வண்ணங்கள் உறவுகளின் ஒத்துழைப்பு: நம்மைப்பற்றி அறிந்தவர்களும், நமது நலனில் பெரிதும் அக்கறையுள்ளவர்களுமானவர்கள் நமது உறவினர்கள். நம் முன்னேற்றத்தில் அவர்களது பங்கும் உண்டு. நமது செயல்பாடுகளுக்கான அங்கீகாரம் முதலில் நமது வீடுகளிலிருந்தே பெறவேண்டியனவாக உள்ளன. வீட்டு மனிதர்களுடனான உறவுமுறை மட்டுமல்லாமல், வெளிமனிதர்களான, நாம் பணிபுரியும் இடம், அப்பணியின் காரணமாக சந்திக்கும் நபர்கள் மற்றும் நம்மைச் சுற்றியுள்ள மனிதர்கள் என அனைவருக்கும் […]

ஆத்திசூடி

06/04/2016 Sujatha Kameswaran 0

ஆத்திசூடி 16. சனி நீராடு                                           – சனிக்கிழமைதோறும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பாயாக. 17. ஞயம்பட உரை                               – பேசுகிறபோது இனிமையான வார்த்தைகளைப் பேசுவாயாக […]