திருவெம்பாவை – பாசுரம் 9

24/12/2020 Sujatha Kameswaran 0

திருவெம்பாவை – பாசுரம் 9 முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே!பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே!உன்னைப் பிரானாகப் பெற்ற உன் சீரடியோம்!உன்னடியார் தாள்பணிவோம்! ஆங்கவர்க்கே பாங்காவோம்!அன்னவரே எங்கணவர் ஆவார்! அவர் உகந்துசொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்இன்ன வகையே எமக்கு எம்கோன் நல்குதியேல்என்ன குறையும் இலோம் ஏலோர் எம்பாவாய்! – மாணிக்கவாசகர்   விளக்கம் :      எம்பெருமானே! நீ பழையைக்கெல்லாம் பழையான மூலப்பொருள். புதுமைகளுக்கெல்லாம் புதுமையான சிவபரம்பொருளே. புதுமைகளுக்கெல்லாம் புதுமையாக […]

பஜகோவிந்தம் – 1

13/03/2020 Sujatha Kameswaran 0

பஜகோவிந்தம் – 1 அத்வைத மார்க்கத்தை நிலைநிறுத்தி, பற்பல தேவதா ஸ்தோத்திரங்களை இயற்றியருளி, பக்தி மார்க்கத்தில் அனைவரையும் ஈடுபட வைத்த ஆதிசங்கரரால் இயற்றப்பட்ட பல்வேறு க்ரந்தங்களில் பஜகோவிந்தமும் ஒன்று. கோவிந்தனை பஜனை செய்வது என்கிற நேரடியான பொருளைக்கொண்டிருந்தாலும், எவ்வாறு என்னென்ன செய்து, எம்முறைப்படி கோவிந்தனை பஜிக்கவேண்டும் என்பதும், அதனால் ஆவதென்ன என்பதனையும் தெளிவாக உரைக்கிறார். ஸ்லோக வடிவில் இருந்தாலும் இசையுடன் பாட ஏதுவாய் அமைந்துள்ளது.  இந்த பஜகோவிந்தம் என்னும் ஸ்தோத்திரத்தின் […]

கொன்றை வேந்தன்

07/06/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 88. வேந்தன் சீறின் ஆந்துணை இல்லை. ஒருவர் மீது அரசன் கோபம் கொண்டாராகின், அவரை அவ்வரசனிடமிருந்து காப்பாற்ற யாரும் துணைப் புரியமாட்டார். 89. வைகல்தோறும் தெய்வம் தொழு. தினமும் இறைவனை வணங்கவேண்டும்.

கொன்றை வேந்தன்

10/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 32. செய்தவம் முதிர்ந்தால் கைதவம் மாளும். தவவாழ்க்கை முதிர்ச்சியடைந்தால், துன்பங்கள் விலகிவிடும். 33. சேமம் புகினும் யாமத்து உறங்கு. காவல் பணி புரிபவராயினும், நடு இரவில் சிறிது நேரமாவது உறங்க வேண்டும்.

கொன்றை வேந்தன்

08/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 28. சிவத்தைப் பேணின் தவத்திற்கு அழகு. அனைத்தும் சிவமயம் என்றுக் கருதிப் போற்றுவதே, தவம் செய்பவர்க்கு மேன்மையாகும். 29. சீரைத் தேடின் ஏரைத் தேடு. சிறந்த வாழ்க்கை வேண்டுமெனில், உழவுத்தொழிலைச் செய்து வாழவேண்டும்.