எண்களின் சிறப்பு – எண்-4

31/05/2021 Sujatha Kameswaran 0

எண் – 4 வேதங்கள் நான்கு – ரிக், யஜுர், சாம & அதர்வணம் திசைகள் நான்கு – கிழக்கு, மேற்கு, வடக்கு & தெற்கு சேனைகள் நான்கு – ரதங்கள், கஜங்கள், குதிரைகள் & காலாட்படைகள் உபாயங்கள் நான்கு – சாம, தான, பேத & தண்டனை பருவங்கள் நான்கு – வசந்தகாலம், கோடைக்காலம், கார்காலம் & குளிர்காலம் மனிதபருவங்கள் நான்கு – பால்யம், யௌவனம், கௌமாரம், வயோதிகம். […]

நான்கு வித தர்மங்கள்

06/11/2019 Sujatha Kameswaran 0

தசரதன் ஒரு ஆண்மகவு வேண்டும் என்றே வேண்டினார். எனினும் அவருக்கு நான்கு மகன்கள். ஏனெனில், நான்கு விதமான தர்மங்களை நிலைநிறுத்தத்தான். நான்கு விதமான தர்மங்களாவன, 1. சாமான்ய தர்மம்: பிள்ளைகள் பெற்றோரிடம் எப்படி நடந்துகொள்ளவேண்டும்? சீடன் குருவிடம் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும்? கணவன் மனைவியிடம் எப்படி நடந்துகொள்ளவேண்டும்? என்கிற சாமான்ய தர்மங்களைத் தானே பின்பற்றி எடுத்துக்காட்ட வந்து வாழ்ந்துகாட்டியவர் ராமன். 2. சேஷ தர்மம்: சாமானிய தர்மங்களை ஒழுங்காகச் செய்துகொண்டுவந்தால் கடைசியில் […]

பெற்றோரும், ஆசிரியரும்

06/09/2017 Sujatha Kameswaran 0

நம்மைச் சுற்றியுள்ள இச்சமுதாயத்தில் பல மாறுதல்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. முன்பெல்லாம் ஓரிருவரைத் தீயோர் என சுட்டிக்காட்டிட முடிந்தது. அவர்களும் சில காரணங்களாலேயே தீயோராய் நடந்துகொண்டனர். இவற்றை இதிகாசம், புராணம் வழியாகவும், நம் மூதாதையரின் அனுபவங்களாலும் அறியலாம். ஆனால் தற்சமயம், நம்மில் மிகச்சிலரையே, சில கால அளவு வரைமட்டுமே நல்லவர் என அடையாளம் காட்டமுடிகிறது. சில காலங்களுக்குள்ளாகவே அவர்தம் ரூபத்தை மாற்றிக்கொள்கிறார். அதற்கு ஒப்புசப்பற்ற காரணங்கள் வேறு… தவறு செய்வது மனித இயல்பே […]

விடுகதையா இந்த வாழ்க்கை? இளம்பருவம்

20/10/2016 Sujatha Kameswaran 0

இளம் பருவம் வாழ்க்கைச் சக்கரத்தின் ஒவ்வொரு நிலையும், அழகானது, இனிமையானது மற்றும் வியப்பானது. இவற்றில் இளம்பருவம் என்பது மிகவும் வியப்பானது, சிலநேரங்களில் அபாயகரமானதும், மொத்தத்தில் அவ்விளம்பிராயத்தினருக்கும் அவர்களைச் சுற்றியுள்ளோருக்கும் பெரும் சவாலான பருவம் அது. இப்பருவத்தில் உள்ளோரை அவரைச்சார்ந்தோர் புரிந்துகொண்டு, அனுசரித்து, அரவணைத்துச் சென்றால் இந்நிலையை இனிதே கடக்கலாம். மற்றவர்கள் நம்மைப்புரிந்து கொள்ளவில்லை என்ற எண்ணம் இளம்பருவத்தினரிடம் ஓங்கி நிற்கிறது. இவ்வயதினரின் கருத்துக்களை முதலில் கேட்டு பின்பு அதில் உள்ள […]

கொன்றை வேந்தன்

07/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 26. சந்ததிக்கு அழகு வந்திசெய்யாமை. பரம்பரை (வம்சம்) தழைத்து சிறக்க வேண்டுமானால், மனைவியைப் பிரியாது கூடி வாழவேண்டும். 27. சான்றோர் என்கை ஈன்றோர்க்கு அழகு. தாம் பெற்ற பிள்ளையை சான்றோன் என்று பிறர் அழைப்பதே, அப்பெற்றோருக்குச் சிறப்பாகும்.

கொன்றை வேந்தன்

28/04/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 8. ஏவா மக்கள் மூவா மருந்து. பெற்றோர் குறிப்பறிந்து செயல்படும் மக்கள் பிணிதீர்க்கும் மருந்தைப் போன்றவர்கள். 9. ஐயம் புகினும் செய்வன செய். பிச்சை எடுத்து வாழவேண்டிய நிலை ஏற்படினும், நற்செயல்களைச் செய்யவேண்டும்.