விடுகதையா இந்த வாழ்க்கை? – வாலிபப்பருவம்

15/11/2016 Sujatha Kameswaran 0

வாலிபப்பருவம் – விடலைப்பருவம் வாழ்க்கைச்சக்கரத்தில் வாலிபப்பருவம் என்பது பல புதிர்களுடன் கூடிய இனிய பருவம். அடுத்தடுத்தக்கட்டத்தில் பல வித்தியாசமான கோணங்களில் பல கேள்விகளையும் அதற்குத் தகுந்த பதில்களையும், சில நேரங்களில் எதிர்மறை பதில்களையும் கொண்டு அமையும் விடுகதைகள் பல கொண்ட வாழ்க்கையில், பெரும் விடுகதையாகவும் சவாலாகவும் அமையும் பருவம் இந்த வாலிபப்பருவம். இப்பருவத்தினருக்கு, தனக்குள் நடக்கும் மாற்றங்கள் சரிவரபுரிவதில்லை. இக்குழப்பத்தின் உச்சகட்டமே உள தடுமாற்றம் அதனால் ஏற்படும் செயல் தடுமாற்றங்கள் […]

கொன்றை வேந்தன்

06/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 24. கோட்செவிக் குறளை காற்றுடன் நெருப்பு. கோள் சொல்லை விரும்புபவர்களிடம், கோள் மூட்டி விடுவது, காற்றோடு நெருப்பானது சேர்வதுபோல அழிவைத் தரும். 25. கெளவை சொல்லின் எவ்வருக்கும் பகை. மற்றவர்கள் மீது குற்றம் சொல்லிக்கொண்டே இருந்தால், எல்லோரிடமும் பகைமையே ஏற்படும்.

கொன்றை வேந்தன்

03/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 18. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை. மற்றவரது குற்றத்தைக் கருதி அவர்களை ஒதுக்கினால், பிறகு நமக்கென யாரும் இருக்கமாட்டார். எனவே, அவர்களது குற்றத்தை நம்மால் இயன்ற அளவில் சரிசெய்யவேண்டும். 19. கூர் அம்பு ஆயினும் வீரியம் பேசேல். மிகவும் கூரான ஆயுதம் கையில் இருந்தாலும், அகந்தையுடன் வீரம் பேசக்கூடாது.