திருவெம்பாவை – பாசுரம் 4

19/12/2020 Sujatha Kameswaran 0

திருவெம்பாவை – பாசுரம் 4 ஒள் நித்தில நகையாய் இன்னம் புலர்ந்தின்றோ?வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ?எண்ணிக்கொடு உள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்கண்ணைத் துயின்று அவமே காலத்தைப் போக்காதேவிண்ணுக்கொரு மருந்தை வேத விழுப்பொருளைக்கண்ணுக்கு இனியானைப் பாடிக் கசிந்துள்ளம்உள்நெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயேவந்துஎண்ணிக் குறையில் துயில் ஏலோர் எம்பாவாய்! – மாணிக்கவாசகர்   விளக்கம் :      (வந்தவர்கள் உறங்கியவளை எழுப்பி)      ஒளி வீசும் முத்துக்கள் போன்ற பற்களை உடையவளே! […]

கொன்றை வேந்தன்

31/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 74. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். முன்னர் பிறர்க்கு ஒருவர் துன்பம் செய்தால் பின்னொரு நாள் அத்துன்பம் அவருக்கே வரும். 75. மூத்தோர் சொல் வார்த்தை அமிழ்தம். பெரியோர்கள் கூறும் அறிவுரை வார்த்தைகள் நம்மை அழிவிலிருந்து காப்பாற்றும் அமுதம் போன்றதாகும்.

கொன்றை வேந்தன்

29/05/2016 Sujatha Kameswaran 2

கொன்றை வேந்தன் 70. மருந்தேயாயினும் விருந்தோடு உண். இறப்பில்லா வாழ்வு தரும் அமுதமே ஆனாலும், விருந்தினர்க்கும் பகிர்ந்து அளித்து உண்ணவேண்டும். 71. மாரி அல்லது காரியம் இல்லை. மழை தக்கக் காலத்தில் பெய்யாவிடில் அதனைச் சார்ந்த வேலைகள் ஏதும் நடைப்பெறாது.

கொன்றை வேந்தன்

28/04/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 8. ஏவா மக்கள் மூவா மருந்து. பெற்றோர் குறிப்பறிந்து செயல்படும் மக்கள் பிணிதீர்க்கும் மருந்தைப் போன்றவர்கள். 9. ஐயம் புகினும் செய்வன செய். பிச்சை எடுத்து வாழவேண்டிய நிலை ஏற்படினும், நற்செயல்களைச் செய்யவேண்டும்.