திருவெம்பாவை – பாசுரம் 10

25/12/2020 Sujatha Kameswaran 0

திருவெம்பாவை – பாசுரம் 10 பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவேபேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்கோதில் குலத்தான் தன் கோயிற்பிணாப் பிள்ளைகாள்ஏதவன் ஊர் ஏதவன் பேர் ஆருற்றார் ஆரயலார்ஏதவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய்! – மாணிக்கவாசகர்      விளக்கம் :      தீயபண்புகள் இல்லாத குலத்தில் உதித்தவர்களும், கோயில் திருப்பணியையே சொந்தமாக்கிக் கொண்டவர்களுமான பெண்களே! நம் […]

திருவெம்பாவை – பாசுரம் 9

24/12/2020 Sujatha Kameswaran 0

திருவெம்பாவை – பாசுரம் 9 முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே!பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே!உன்னைப் பிரானாகப் பெற்ற உன் சீரடியோம்!உன்னடியார் தாள்பணிவோம்! ஆங்கவர்க்கே பாங்காவோம்!அன்னவரே எங்கணவர் ஆவார்! அவர் உகந்துசொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்இன்ன வகையே எமக்கு எம்கோன் நல்குதியேல்என்ன குறையும் இலோம் ஏலோர் எம்பாவாய்! – மாணிக்கவாசகர்   விளக்கம் :      எம்பெருமானே! நீ பழையைக்கெல்லாம் பழையான மூலப்பொருள். புதுமைகளுக்கெல்லாம் புதுமையான சிவபரம்பொருளே. புதுமைகளுக்கெல்லாம் புதுமையாக […]

திருவெம்பாவை – பாசுரம் 8

23/12/2020 Sujatha Kameswaran 0

திருவெம்பாவை – பாசுரம் 8 கோழி சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும்ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கு எங்கும்கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணைகேழில் விழுப்போருள்கள் பாடினோம் கேட்டிலையோ?வாழி! ஈதென்ன உறக்கமோ? வாய் திறவாய்!ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ?ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனைஏழை பங்காளானையே பாடேலோர் எம்பாவாய்! – மாணிக்கவாசகர் விளக்கம் : தோழியை எழுப்ப வந்த பெண்கள், அன்புத்தோழியே! கோழி கூவிவிட்டது. பறவைகள் கீச்சிடுகின்றன. வாத்தியங்கள் இசைக்கப்படுகின்றன.  கோயிலில் வெண் சங்குகள் […]

திருவெம்பாவை – பாசுரம் 7

22/12/2020 Sujatha Kameswaran 0

திருவெம்பாவை – பாசுரம் 7 அன்னே இறையும் சிலவோ பல அமரர்உன்னற்கரியான் ஒருவன் இருஞ்சீரான்சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய்தென்னா என்னா முன்னம் தீசேர் மெழுகொப்பாய்என்னானை என்னரையன் இன்னமுதென்றெல்லாமும்சொன்னோம்கேள் வெவ்வேறாய் இன்னந்துயிலுதியோவன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்! – மாணிக்கவாசகர் விளக்கம் : தாயினும் மேலான பெண்ணே! உனது சிறப்புத்தன்மைகளில் இந்த தூக்கமும் ஒன்றோ? தேவர்களால் சிந்திப்பதற்கும் அரியவன் என்றும், மிகுந்த புகழுடையவன் என்றும், சிவனுக்குரிய திருநீறு, ருத்ராட்சம் […]

திருவெம்பாவை – பாசுரம் 6

21/12/2020 Sujatha Kameswaran 0

திருவெம்பாவை – பாசுரம் 6 மானேநீ நென்னலை நாளை வந்து உங்களை நானே எழுப்புவன் என்றலும் நாணாமே போன திசை பகராய்! இன்னம் புலர்ந்தின்றோ? வானே நிலனே பிறவே அறிவரியான் தானே வந்து எம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும் வான்வார் கழல்பாடி வந்தோர்க்கு உன் வாய்திறவாய் ஊனே உருகாய்! உனக்கே உறும் எமக்கும் ஏனோர்க்கும் தம்கோனைப் பாடேலோர் எம்பாவாய்! – மாணிக்கவாசகர் விளக்கம் : (வந்தவர்கள் உறங்கிக்கொண்டிருந்தவளை எழுப்பிக் கூறுவது) மான் […]

திருவெம்பாவை – பாசுரம் 5

20/12/2020 Sujatha Kameswaran 0

திருவெம்பாவை – பாசுரம் 5 மால் அறியா நான்முகனும் காணா மலையினை நாம் போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும் பாலூறு தேன்வாய்ப் படிறீ! கடைதிறவாய்! ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான் கோலமும் நம்மை ஆட்கொண்டருளிக் கோதாட்டும் சீலமும் பாடிச் சிவனே சிவனே என்று ஓலம் இடினும் உணராய் உணராய் காண் ஏலக் குழலி பரிசு ஏலோர் எம்பாவாய்! – மாணிக்கவாசகர் விளக்கம் : (வந்தவர்கள், உறங்கியவளை எழுப்பிக் கூறுவது) திருமால் […]

திருவெம்பாவை – பாசுரம் 4

19/12/2020 Sujatha Kameswaran 0

திருவெம்பாவை – பாசுரம் 4 ஒள் நித்தில நகையாய் இன்னம் புலர்ந்தின்றோ?வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ?எண்ணிக்கொடு உள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்கண்ணைத் துயின்று அவமே காலத்தைப் போக்காதேவிண்ணுக்கொரு மருந்தை வேத விழுப்பொருளைக்கண்ணுக்கு இனியானைப் பாடிக் கசிந்துள்ளம்உள்நெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயேவந்துஎண்ணிக் குறையில் துயில் ஏலோர் எம்பாவாய்! – மாணிக்கவாசகர்   விளக்கம் :      (வந்தவர்கள் உறங்கியவளை எழுப்பி)      ஒளி வீசும் முத்துக்கள் போன்ற பற்களை உடையவளே! […]

திருவெம்பாவை – பாசுரம் 3

18/12/2020 Sujatha Kameswaran 0

திருவெம்பாவை – பாசுரம் 3 முத்தன்ன வெண்ணகையாய் முன்வந்து எதிர் எழுந்து என் அத்தன்! ஆனந்தன்! அமுதன் என்று அள்ளூறித் தித்திக்கப் பேசுவாய்! வந்துன் கடை திறவாய்! பத்துடையீர்! ஈசன் பழ அடியீர் பாங்குடையீர்! புத்தடியோம் புன்மை தீர்த்து ஆட்கொண்டால் பொல்லாதோ? எத்தோ நின் அன்புடைமை எல்லோம் அறியோமோ? சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை? இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய்! – மாணிக்கவாசகர் விளக்கம் : ‘முத்துபோன்ற பெண்பற்களைக் […]

திருவெம்பாவை – பாசுரம் 2

17/12/2020 Sujatha Kameswaran 0

திருவெம்பாவை – பாசுரம் 2 பாசம் பரஞ்சோதிக்கு என்பாய் இராப்பகல் நாம் பேசும்போது எப்போது இப்போதார் அமளிக்கே நேசமும் வைத்தனையோ? நேரிழையாய்! நேரிழையீர்! சீசீ! இவையும் சிலவோ? விளையாடி ஏசும் இடம் ஈதோ? விண்ணோர்கள் ஏத்துதற்குக் கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும் தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள் ஈசனார்க்கு அன்பார்யாம் ஆரேலோர் எம்பாவாய்! – மாணிக்கவாசகர் விளக்கம் : (தூங்குகின்றக் பெண்ணை எழுப்ப வந்தவளுள் ஒருத்தி) சிறந்த ஆபரணங்களை அணிந்தவளே! […]

திருவெம்பாவை – பாசுரம் 1

16/12/2020 Sujatha Kameswaran 0

திருவெம்பாவைபாசுரம் – 1 ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்துபோதார் அமளியின்மேல் நின்றும் புரண்டு இங்ஙன்ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னேஎன்னேஈதே எம்தோழி பரிசேலோர் எம்பாவாய்! – மாணிக்கவாசகர்   விளக்கம் :      அகன்ற ஒளி பொருந்தியக் கண்களை உடையவளே! முதலும் முடிவும் இல்லாதவனும் அரிய பெரிய சோதி வடிவினனுமாகிய சிவபெருமானை நாங்கள் […]