பஜகோவிந்தம் – 26

10/05/2021 Sujatha Kameswaran 0

பஜகோவிந்தம் – 26 எல்லோரும் சமம்: சத்ரௌ மித்ரே புத்ரே பந்தௌ     மா குரு யத்நம் விக்ரஹஸந்தௌ|பவ ஸமசித்த: ஸர்வத்ர த்வம்     வாஞ்ச்சஸ்யசிராத் யதி விஷ்ணுத்வம்|| பதவுரை: சத்ரௌ                                    – பகைவனிடத்திலும்மித்ரே                  […]

திருவெம்பாவை – பாசுரம் 18

02/01/2021 Sujatha Kameswaran 0

திருவெம்பாவை – பாசுரம் – 18 அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும் விண்ணோர் முடியின் மணித்தொகை வீறற்றாற் போல் கண்ணார் இரவி கதிர் வந்து கார் கரப்பத் தண்ணார் ஒளி மழுங்கித் தாரகைகள் தாம் அகல பெண்ணாகி ஆணாய் அலியாய் பிறங்கொளி சேர் விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகி கண்ணார் அமுதமாய் நின்றான் கழல்பாடி பெண்ணே இப்பூம்புனல் பாய்ந்தாடேலோர் எம்பாவாய். – மாணிக்கவாசகர் விளக்கம் : தோழியே! திரு அண்ணாமலை அண்ணலது […]

திருப்பாவை – பாசுரம் 11

26/12/2020 Sujatha Kameswaran 0

திருப்பாவை கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்துசெற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்குற்றம் ஒன்றில்லாத கோவலர்த்தம்பொற்கொடியே புற்று அரவு அல்குல் புனமயிலே போதராய்சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்துநின் முற்றம்புகுந்து முகில் வண்ணன் பேர் பாடசிற்றாதே பேசாதே செல்வ பெண்டாட்டி நீஎற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்! – ஆண்டாள்

திருவெம்பாவை – பாசுரம் 10

25/12/2020 Sujatha Kameswaran 0

திருவெம்பாவை – பாசுரம் 10 பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவேபேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்கோதில் குலத்தான் தன் கோயிற்பிணாப் பிள்ளைகாள்ஏதவன் ஊர் ஏதவன் பேர் ஆருற்றார் ஆரயலார்ஏதவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய்! – மாணிக்கவாசகர்      விளக்கம் :      தீயபண்புகள் இல்லாத குலத்தில் உதித்தவர்களும், கோயில் திருப்பணியையே சொந்தமாக்கிக் கொண்டவர்களுமான பெண்களே! நம் […]

நட்பு

02/04/2020 Sujatha Kameswaran 0

நல்ல நட்பு நல்ல வாழ்வைத்தரும் உறவுமுறைகளில் நட்பு என்பது சிறந்தது. அதிலும் நல்ல ஆழ்ந்த நட்பு மிகவும் சிறப்பானது. நட்பைப்பற்றி பல புலவர்களும் அறிஞர்களும் தமது சிறந்தக் கருத்துக்களைக் கூறியுள்ளனர். புராணம், இலக்கியம் உரைக்கும் நட்பு: கம்ப ராமாயணத்தில் குகபடலத்தில், ராமன் தன்னைக்காண வந்த குகனைப்பார்த்து, ‘யாதினும் இனிய நண்ப! எல்லாப் பொருள்களினும் இனிமையான நண்பனே; என்பார். நட்பிற்கு பெருமை சேர்க்கும் நண்பனுக்குக் கொடுக்கும் மரியாதையை கம்பர் தமது ராமாயணத்தில் […]

கொன்றை வேந்தன்

05/06/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 84. வீரன் கேண்மை கூரம்பு ஆகும். வீரனுடனான நட்பானது, நம் கையில் கூரான அம்பு இருப்பதற்குச் சமம். 85. உரவோர் என்கை இரவாது இருத்தல். மன உறுதி என்பது, பிறரிடம் சென்று எதையும் யாசிக்காமல் இருப்பதாகும்.

கொன்றை வேந்தன்

17/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 46. தொழுதூண் சுவையின் உழுதூண் இனிது. மற்றவரிடம் கெஞ்சிக்கேட்டு(பிச்சையெடுத்து) உண்பதைவிட, தானே உழுது அல்லது உழைத்து உண்ணலாம். 47. தோழனோடும் ஏழைமை பேசேல். நெருங்கிய நண்பரிடம்கூட உனது வறுமை நிலையை வெளிப்படுத்திப் புலம்பக்கூடாது.