எண்களின் சிறப்பு – எண்-5

02/06/2021 Sujatha Kameswaran 0

எண் – 5 தாய்கள் ஐவர் – பெற்றதாய், அண்ணனின் மனைவி, குருவின் மனைவி, மனைவியைப் பெற்ற தாய் & மன்னனின் மனைவி தந்தையர் ஐவர் – பெற்ற தந்தை, அண்ணன், உபநயனம் செய்வித்தவர், குரு-ஆசிரியர் & ஆபத்திலிருந்து காத்தவர். ஞானேந்திரியங்கள் ஐந்து – ஒளி, சுவை, ஊறு, ஓசை & மணம் பர்வங்கள் ஐந்து – கிருஷ்ணபட்ச அஷ்டமி, கிருஷ்ணபட்ச சதுர்தசி, அமாவாசை, பௌர்ணமி & சங்கராந்தி கங்கைகள் […]

பஜகோவிந்தம் – 17

20/01/2021 Sujatha Kameswaran 0

பஜகோவிந்தம் – 17 அனுபவத்தாலும் ஆசை அகல்வதில்லை: அக்ரே வஹ்நி: ப்ருஷ்டே பாநு: ராத்ரௌ சுபுக ஸமர்ப்பித ஜாநு: | கரதல பிக்ஷஸ் தருதல வாஸ: ததபி ந முஞ்ச த்யாசா பாச: || பதவுரை: அக்ரே எதிரில் வஹ்நி: நெருப்பு ப்ருஷ்டே பின்புறத்தில் பாநு: சூரியன் ராத்ரௌ இரவில் சுபுக ஸமர்ப்பித ஜாநு: குளிருக்கு இதமாக முழங்காலில் முகத்தை புதைத்து வைத்திருக்கிறான் கரதல பிக்ஷ: கையில் பிட்சை ஏந்துகிறான் […]

திருவெம்பாவை – பாசுரம் 12

27/12/2020 Sujatha Kameswaran 0

திருவெம்பாவை – பாசுரம் 12 ஆர்த்த பிறவித்துயர் கெட நாம் ஆர்த்தாடும்தீர்த்தன் நல் தில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்கூத்தன் இவ்வானும் குவலயமும் எல்லோமும்காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடிவார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்ஆர்ப்ப அரவம் செய்ய அணிகுழல்மேல் வண்டார்பப்பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்எத்தி இருஞ்சுனை நீராடேலோர் எம்பாவாய்! – மாணிக்கவாசகர் விளக்கம் : தோழியரே! இப்போது வாய்த்துள்ள பிறவியாகிய துன்பம் இனிமேலும் வராமல் தடுக்கும் கங்கையைத் தலையில் கொண்டவனும், சிறந்த திருத்தலமான சிதம்பரத்தில் […]

அக்கினிக் குஞ்சு –

10/11/2016 Sujatha Kameswaran 0

அக்கினிக்குஞ்சு – பாரதியார் அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் – அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்; வெந்து தணிந்தது காடு; தழல் வீரத்தில் குஞ்சென்னும் மூப்பென்றும் உண்டோ? தத்தரிகிட தத்தரிகிட தித்தோம். பொருள்: 1.(விடுதலை வேட்கையை / சமுதாயத்தை உத்தேசித்து) பிற நாட்டினரின் ஆதிக்கத்தால், நம் இந்திய நாடு வனம் போலக் காட்சியளித்தது. இந்நாட்டில் வாழும் மனிதர்கள் அடிமைத்தனத்தில் ஆட்பட்டு உணர்வற்று மரம்போல் இருந்தனர். அவர்தம் மனம் எனும் பொந்தில் […]

தெய்வச் சிலைகள்

02/11/2016 Sujatha Kameswaran 1

தெய்வச்சிலைகள்-தெய்வீகச்சிலைகள் இந்தியத் திருநாட்டின் பாரம்பரியமிக்க பல விஷயங்களில் தெய்வச் சிலைகள் பெரும் சிறப்புகள் வாய்ந்தவைகளாகத் திகழ்கின்றன. ஒளி வடிவான இறைவனுக்கு பக்தர்கள் தங்கள் கற்பனைத் திறனாலும், தெய்வத்துடன் நெருக்கமான உணர்வு வேண்டும் என்பதாலும் உருவ அமைப்பை ஏற்படுத்தினர். ஆதி மனிதர்கள் முதலில் இயற்கையையே தெய்வமாக வழிபட்டனர் என்பதனை வரலாற்றின் மூலம் அறியலாம். சூரியன், அக்னி(நெருப்பு), காற்று, மலை, நீர், பூமி ஆகிய இயற்கையை வழிபட்ட மக்கள், தங்கள் வழிபாட்டின் அடுத்த […]

பஞ்ச பூதத்தலங்கள்

01/11/2016 Sujatha Kameswaran 0

பஞ்ச பூதத்தலங்கள் மண்/நிலம் (ப்ருத்வி), நீர் (அப்பு), நெருப்பு (தேயு), காற்று (வாயு), ஆகாயம் (ஆகாஷம்) ஆகிய ஐம்பூதங்களிலும் பரந்து விளங்குவதே சிவலிங்கம் ஆகும். இதனை அனைவருக்கும் உணர்த்தும் பொருட்டு இவ்வைம்பெரும் பூதங்களின் அடிப்படையில் ஐந்து தலங்களை அமைத்தனர் நம் முன்னோர்கள். காஞ்சிபுரம் மற்றும் திருவாரூர் (மண்), திருவானைக்காவல் (நீர்), திருவண்ணாமலை (நெருப்பு), காளஹஸ்தி (காற்று), சிதம்பரம் (ஆகாயம்) என தமிழகத்தின் வடப்பகுதியில் அமைந்துள்ள ஆலயங்களாகும். இவைப்போன்றே பாண்டியநாட்டின் தென்பகுதியிலும் பஞ்சபூதத்தலங்கள் […]

கொன்றை வேந்தன்

14/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 40. தீராக் கோபம் போராய் முடியும். நீங்காத பெருங்கோபம், இறுதியில் பெரும் போர் ஏற்படச்செய்யும். 41. துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு. கணவனின் துன்பம் கண்டு துடிக்காத பெண், அடிவயிற்றில் கட்டிய நெருப்பைப் போன்றவளாவாள்.

கொன்றை வேந்தன்

06/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 24. கோட்செவிக் குறளை காற்றுடன் நெருப்பு. கோள் சொல்லை விரும்புபவர்களிடம், கோள் மூட்டி விடுவது, காற்றோடு நெருப்பானது சேர்வதுபோல அழிவைத் தரும். 25. கெளவை சொல்லின் எவ்வருக்கும் பகை. மற்றவர்கள் மீது குற்றம் சொல்லிக்கொண்டே இருந்தால், எல்லோரிடமும் பகைமையே ஏற்படும்.