எண்களின் சிறப்பு – எண்-4

31/05/2021 Sujatha Kameswaran 0

எண் – 4 வேதங்கள் நான்கு – ரிக், யஜுர், சாம & அதர்வணம் திசைகள் நான்கு – கிழக்கு, மேற்கு, வடக்கு & தெற்கு சேனைகள் நான்கு – ரதங்கள், கஜங்கள், குதிரைகள் & காலாட்படைகள் உபாயங்கள் நான்கு – சாம, தான, பேத & தண்டனை பருவங்கள் நான்கு – வசந்தகாலம், கோடைக்காலம், கார்காலம் & குளிர்காலம் மனிதபருவங்கள் நான்கு – பால்யம், யௌவனம், கௌமாரம், வயோதிகம். […]

பஜகோவிந்தம் – 8

08/04/2020 Sujatha Kameswaran 0

பஜகோவிந்தம் – 8 தெய்வ சிந்தனைத் தேவை பாலஸ்தாவத் க்ரீடாஸக்த: தருணஸ்தாவத் தருணீஸக்த: வ்ருத்தஸ்தாவத் சிந்தாஸக்த: ப்ரே ப்ரஹ்மணி கோऽபி ந ஸக்த: || பதவுரை: பால: தாவத்                           – பாலகனோவென்றால் க்ரீடாஸக்த:                           – விளையாட்டில் […]

கொன்றை வேந்தன்

15/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 42. தூற்றும் பெண்டிர் கூற்றெனத் தகும். கணவனைப் பற்றி அவதூறு பேசும் பெண்ணை, அக்குடும்பத்தின் எமன் என்று எனலாம். 43. தெய்வம் சீறின் கைதவம் மாளும். தெய்வத்தின் கோபத்திற்கு ஆளானால், முன்னர் தவம் செய்து பெற்ற புண்ணியம் அனைத்தும் அழிந்துபோகும்.

கொன்றை வேந்தன்

07/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 26. சந்ததிக்கு அழகு வந்திசெய்யாமை. பரம்பரை (வம்சம்) தழைத்து சிறக்க வேண்டுமானால், மனைவியைப் பிரியாது கூடி வாழவேண்டும். 27. சான்றோர் என்கை ஈன்றோர்க்கு அழகு. தாம் பெற்ற பிள்ளையை சான்றோன் என்று பிறர் அழைப்பதே, அப்பெற்றோருக்குச் சிறப்பாகும்.

கொன்றை வேந்தன்

27/04/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 6. ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும். ஊர்மக்கள் அனைவருடனும் விரோதம் கொண்டால், வம்சத்தின் அனைவரும் கெட்டொழிய நேரும். 7. எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும். எண்களை அடிப்படையாகக்கொண்ட கணிதமும், எழுத்துக்களை அடிப்படையாகக்கொண்ட அறநூல்களும் கண்களுக்கிணையான முக்கியத்துவம் வாய்ந்தவை.

கொன்றை வேந்தன்

25/04/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 2. ஆலயம் தொழுவது சாலவும் நன்று கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபடுவது மிகவும் சிறந்த செயலாகும். 3. இல்லறம் அல்லது நல்லறம் அன்று. அறம் சார்ந்த நல்ல குடும்பவாழ்க்கை இவ்வுலகில் இல்லையெனில், பிற நல்ல அறங்கள் ஏதும் இருக்காது.