திருப்பாவை – பாசுரம் 27

11/01/2021 Sujatha Kameswaran 0

திருப்பாவை கூடாரை வெல்லுஞ்சீர்க் கோவிந்தா! உன்தன்னை பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்; நாடு புகழும் பரிசினால் நன்றாக, சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே பாடகமே யென்றனைய பல்கலனும் யாம் அணிவோம்; ஆடை உடுப்போம்; அதன்பின்னே பாற்சோறு மூடநெய் பெய்து முழங்கை வழிவார கூடியிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்! – ஆண்டாள்

திருப்பாவை – பாசுரம் 17

01/01/2021 Sujatha Kameswaran 0

திருப்பாவை அம்பரமே, தண்ணீரே, சோறே அறஞ்செய்யும் எம்பெருமான்! நந்தகோ பாலா! எழுந்திராய்; கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே! குலவிளக்கே! எம்பெருமாட்டி! யசோதாய்! அறிவுறாய்; அம்பரம் ஊடறுத் தோங்கி உலகளந்த உம்பர்கோ மானே! உறங்காது எழுந்திராய்; செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா! உம்பியும் நீயும் உறங்கேலோர் எம்பாவாய்! – ஆண்டாள்   விளக்கம்: எங்களுடைய தலைவனாய் இருக்கிற நந்தகோபனின் திருமாளிகையை பாதுகாக்கும் காவலனே! கொடித் தோரணம் கட்டப்பட்ட வாசல் காவலனே! ஆயர்குல சிறுமியரான […]

நட்பு

02/04/2020 Sujatha Kameswaran 0

நல்ல நட்பு நல்ல வாழ்வைத்தரும் உறவுமுறைகளில் நட்பு என்பது சிறந்தது. அதிலும் நல்ல ஆழ்ந்த நட்பு மிகவும் சிறப்பானது. நட்பைப்பற்றி பல புலவர்களும் அறிஞர்களும் தமது சிறந்தக் கருத்துக்களைக் கூறியுள்ளனர். புராணம், இலக்கியம் உரைக்கும் நட்பு: கம்ப ராமாயணத்தில் குகபடலத்தில், ராமன் தன்னைக்காண வந்த குகனைப்பார்த்து, ‘யாதினும் இனிய நண்ப! எல்லாப் பொருள்களினும் இனிமையான நண்பனே; என்பார். நட்பிற்கு பெருமை சேர்க்கும் நண்பனுக்குக் கொடுக்கும் மரியாதையை கம்பர் தமது ராமாயணத்தில் […]

வீட்டுக் குறிப்புகள் -2

31/10/2019 Sujatha Kameswaran 0

மழை மற்றும் குளிர் காலங்களில் துவைத்துக் காய வைத்த துணிகளும் ஈரப்பதத்துடன் ஜில்லென்று இருக்கும். அத்துணிகளை மடித்து கம்பளியினுள் சுற்றி வைத்து மூன்று மணி நேரம் கழித்து எடுத்தால் நன்கு வெயிலில் காய்ந்ததுபோல் இருக்கும். எண்ணெய் பல நாட்களுக்கு காரலின்றி கசப்பின்றி இருக்க அதில் 5 அல்லது 6 வற்றல் மிளகாய்களைப் போட்டு வைக்கவேண்டும். கருவேப்பிலை, கொத்தமல்லியை தனித்தனியே வலைப் பையிலோ, ட்ரேயிலோ வைத்து ஃபிரிட்ஜ்-ஜில் வைத்தால் உபயோகப்படுத்தியது போக […]