கொன்றை வேந்தன்

01/06/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 76. மெத்தையில் படுத்தல் நித்திரைக்கு அழகு. இலவம் பஞ்சு மெத்தையில் உறங்குவது ஆழ்ந்த உறக்கத்தையும், ஆரோக்கியத்தையும் தரும். 77. மேழிச் செல்வம்படாது. உழவுத் தொழிலால் வரும் செல்வம் ஒருநாளும் அழிந்து போகாது.

கொன்றை வேந்தன்

31/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 74. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். முன்னர் பிறர்க்கு ஒருவர் துன்பம் செய்தால் பின்னொரு நாள் அத்துன்பம் அவருக்கே வரும். 75. மூத்தோர் சொல் வார்த்தை அமிழ்தம். பெரியோர்கள் கூறும் அறிவுரை வார்த்தைகள் நம்மை அழிவிலிருந்து காப்பாற்றும் அமுதம் போன்றதாகும்.

கொன்றை வேந்தன்

30/04/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 12. ஒளவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு. மற்றவர் வளர்ச்சியைப் பார்த்துப் பொறாமையால் பேசுவது, நாம் பெற்றுள்ள நல்லனவற்றை அழித்து விடும். 13. அஃகமும் காசும் சிக்கெனத் தேடு. சிக்கனமாக வாழ்க்கை நடத்தி, செல்வத்தை சேர்க்கவேண்டும்.

ஆத்திசூடி

10/04/2016 Sujatha Kameswaran 0

ஆத்திசூடி 36. குணமது கைவிடேல் – நல்லபண்புகளை ஒருபோதும் விடாமல் கடைபிடிக்கவேண்டும். 37. கூடிப் பிரியேல்               – நல்லவர்களுடன் பழகி, பின் அவர்களை விட்டுப் பிரியாமல் இருத்தல் நலம். 38. கெடுப்பது ஒழி               – பிறரைக் கெடுக்கும் எண்ணங்களையும், செயல்களையும், அழித்துவிடவேண்டும். 39. கேள்வி முயல்              – அறிஞர்கள், சான்றோர்களின் கருத்துக்களைக் கேட்டறிய எப்போதும் முயற்சி செய்யவேண்டும். […]