கொன்றை வேந்தன்

04/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 20. கெடுவது செய்யின் விடுவது கருமம். ஒரு செயலானது தீயவிளைவைத்தருவதாக இருந்தால், அச்செயலைச் செய்யாமல் விடுவது நல்லது. 21. கேட்டில் உறுதி கூட்டும் உடைமை. வறுமை நிலை ஏற்பட்டாலும், நமது மன உறுதியே, நம்மிடம் செல்வத்தைக் கொண்டுசேர்க்கும்.

எண்ணங்கள் வண்ணங்கள்

24/04/2016 Sujatha Kameswaran 0

எண்ணங்கள் வண்ணங்கள் எண்ணமும் செயலும்: வெற்றியை நோக்கிய பயணத்தில் முதலாவதாக நமது மனதை தயார்ப்படுத்துதல் மிகவும் அவசியம். செயலைக் குறித்தும், அதன் முடிவான வெற்றியைக்குறித்தும், திடமான எண்ணத்தை நம் மனதில் நாம் ஏற்படுத்திக்கொள்ளவேண்டும். ‘எண்ணமே வாழ்வு’, என்பதற்கிணங்க, நமது மனதில் விதைத்த செயலிற்கான எண்ணம், வழிமுறைகள், மற்றும் பல்வேறு நடைமுறைகள் என்பன அவ்விதைக்கு இடப்படும் உரமாகவும், ஊற்றப்படும் நீராகவும் அமைந்து பெரும் பலனளிக்கும். இவ்வாறு எண்ணுவதில், செயலைக்குறித்து எத்தனைமுறை, எத்தனை […]

எண்ணங்கள் வண்ணங்கள்

11/04/2016 Sujatha Kameswaran 0

மனதில் உறுதி வேண்டும், வாக்கினிலே இனிமை வேண்டும். – மகாகவி பாரதியார் எண்ணங்கள் வண்ணங்கள் உறவுகளின் ஒத்துழைப்பு: நம்மைப்பற்றி அறிந்தவர்களும், நமது நலனில் பெரிதும் அக்கறையுள்ளவர்களுமானவர்கள் நமது உறவினர்கள். நம் முன்னேற்றத்தில் அவர்களது பங்கும் உண்டு. நமது செயல்பாடுகளுக்கான அங்கீகாரம் முதலில் நமது வீடுகளிலிருந்தே பெறவேண்டியனவாக உள்ளன. வீட்டு மனிதர்களுடனான உறவுமுறை மட்டுமல்லாமல், வெளிமனிதர்களான, நாம் பணிபுரியும் இடம், அப்பணியின் காரணமாக சந்திக்கும் நபர்கள் மற்றும் நம்மைச் சுற்றியுள்ள மனிதர்கள் என அனைவருக்கும் […]