கொன்றை வேந்தன்

07/06/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 88. வேந்தன் சீறின் ஆந்துணை இல்லை. ஒருவர் மீது அரசன் கோபம் கொண்டாராகின், அவரை அவ்வரசனிடமிருந்து காப்பாற்ற யாரும் துணைப் புரியமாட்டார். 89. வைகல்தோறும் தெய்வம் தொழு. தினமும் இறைவனை வணங்கவேண்டும்.

கொன்றை வேந்தன்

27/05/2016 Sujatha Kameswaran 2

கொன்றை வேந்தன் 66. பேதைமை என்பது மாதர்க்கு அணிகலம். அறிந்தும் அறியாததுபோல் அடங்கி நடப்பதே, பெண்களுக்கு சிறந்த அணிகலனாகும். 67. பையச் சென்றால் வையம் தாங்கும். ஒருவர் கோபமடையாமல், பொறுமையுடன் செயல்பட்டால், அவரை இவ்வுலகம் போற்றும்.

கொன்றை வேந்தன்

15/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 42. தூற்றும் பெண்டிர் கூற்றெனத் தகும். கணவனைப் பற்றி அவதூறு பேசும் பெண்ணை, அக்குடும்பத்தின் எமன் என்று எனலாம். 43. தெய்வம் சீறின் கைதவம் மாளும். தெய்வத்தின் கோபத்திற்கு ஆளானால், முன்னர் தவம் செய்து பெற்ற புண்ணியம் அனைத்தும் அழிந்துபோகும்.

கொன்றை வேந்தன்

14/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 40. தீராக் கோபம் போராய் முடியும். நீங்காத பெருங்கோபம், இறுதியில் பெரும் போர் ஏற்படச்செய்யும். 41. துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு. கணவனின் துன்பம் கண்டு துடிக்காத பெண், அடிவயிற்றில் கட்டிய நெருப்பைப் போன்றவளாவாள்.

ஆத்திசூடி

03/04/2016 Sujatha Kameswaran 0

ஆத்திசூடி அறம் செய விரும்பு       – நல்ல செயல்களை, தான தருமங்களைச் செய்வதற்கு விருப்பம்                                                                  கொள்ளவேண்டும் ஆறுவது சினம்   […]