காலச்சக்கரம்

13/04/2024 Sujatha Kameswaran 0

காலச்சக்கரம் காலமாற்றத்தைக் குறிக்கும் சொல் காலச்சக்கரம். இது காலம்-நேரம் மாறுவதைக் குறிப்பிடுவதோடு, அச்சுழற்சியியுடன் மானிடர்களும் எங்ஙனம் மாறுகின்றனர் என்பதை குறிக்கின்றது. இருபது வயதில் இதுதான் வேண்டும் என்று தோன்றும் முப்பது வயதில் இவைகள் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றும் நாற்பது வயதில் இதுவே போதும் என்று தோன்றும் ஐம்பது வயதில் இவைகள் இல்லையென்றாலும் பரவாயில்லை எனத் தோன்றும் அறுபது வயதில் எது இல்லையென்றாலும் பரவாயில்லை என்று தோன்றும் எழுபது […]

பஜகோவிந்தம் – 27

10/05/2021 Sujatha Kameswaran 0

பஜகோவிந்தம் – 27 ஆன்மஞானியாதல்: காமம் க்ரோதம் லோபம் மோஹம்த்யக்த்வாத்மாநம் பாவய கோऽஹம் |ஆத்ம ஜ்ஞாந விஹீநா மூடா:தே பச்யந்தே நரக நிகூடா: || பதவுரை: காமம் – ஆசைக்ரோதம் – கோபம்; வெறுப்புலோபம் – பணத்தாசைமோஹம் – மயக்கம்த்யக்த்வா – விட்டுவிட்டுஆத்மாநம் – தன்னைப்பற்றிபாவய – நினைத்துப்பார்க: – யார்அஹம் – நான்ஆத்மஜ்ஞாந விஹீநா: – ஆன்மஞானமில்லாதவர்களோதே – அவர்கள்பச்யந்தே – துன்பத்தை அனுபவிக்கிறார்கள்நரகநிகூடா: – நரகத்தில் மூழ்கி […]

விடுகதையா இந்த வாழ்க்கை?

01/09/2016 Sujatha Kameswaran 0

விடுகதையா இந்த வாழ்க்கை? குழந்தைகள் குழந்தைகளின் உலகம் மிக அருமையானது. தன்னைச்சுற்றி நடக்கும் சூஷ்மங்களை அறிந்துகொள்ள முடியாத பருவம். நம்பிக்கையையும், அன்பையும் ஆணிவேராய் கொண்ட பருவம். குரோதம் இல்லை, பகைமை இல்லை, வெறுப்பில்லை, கோபமும் இல்லை. தன்னால் இயன்றவற்றிற்கெல்லாம் சிரிப்பதும், இயலாமையின்போது அழுவதும், இயல்பாய் கொண்டுள்ளன குழந்தைகள். தொடர்ந்து முயலும் முயற்சி, கடுஞ்சொற்பேசியவரிடமும், நிரந்தர கோபம் கொள்ளாமை. தான் அண்டியவரை நம்புவது, தன்னை சேர்ந்தவரை மகிழ்விப்பது என எவ்வித பொருட்பலனையும் […]

கொன்றை வேந்தன்

07/06/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 88. வேந்தன் சீறின் ஆந்துணை இல்லை. ஒருவர் மீது அரசன் கோபம் கொண்டாராகின், அவரை அவ்வரசனிடமிருந்து காப்பாற்ற யாரும் துணைப் புரியமாட்டார். 89. வைகல்தோறும் தெய்வம் தொழு. தினமும் இறைவனை வணங்கவேண்டும்.

கொன்றை வேந்தன்

27/05/2016 Sujatha Kameswaran 2

கொன்றை வேந்தன் 66. பேதைமை என்பது மாதர்க்கு அணிகலம். அறிந்தும் அறியாததுபோல் அடங்கி நடப்பதே, பெண்களுக்கு சிறந்த அணிகலனாகும். 67. பையச் சென்றால் வையம் தாங்கும். ஒருவர் கோபமடையாமல், பொறுமையுடன் செயல்பட்டால், அவரை இவ்வுலகம் போற்றும்.

கொன்றை வேந்தன்

15/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 42. தூற்றும் பெண்டிர் கூற்றெனத் தகும். கணவனைப் பற்றி அவதூறு பேசும் பெண்ணை, அக்குடும்பத்தின் எமன் என்று எனலாம். 43. தெய்வம் சீறின் கைதவம் மாளும். தெய்வத்தின் கோபத்திற்கு ஆளானால், முன்னர் தவம் செய்து பெற்ற புண்ணியம் அனைத்தும் அழிந்துபோகும்.

கொன்றை வேந்தன்

14/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 40. தீராக் கோபம் போராய் முடியும். நீங்காத பெருங்கோபம், இறுதியில் பெரும் போர் ஏற்படச்செய்யும். 41. துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு. கணவனின் துன்பம் கண்டு துடிக்காத பெண், அடிவயிற்றில் கட்டிய நெருப்பைப் போன்றவளாவாள்.

கொன்றை வேந்தன்

13/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 38. தாயிற்சிறந்ததொரு கோயிலும் இல்லை. பெற்ற தாயைவிட சிறந்த வணங்கத்தக்க கோயில் இல்லை.   39. திரைகடல் ஓடியும் திரவியம் தேடு. கடல் தாண்டி வெளிநாடு சென்றாவது, பொருள் ஈட்டவேண்டும்.  

திருக்குறள்

07/05/2016 Sujatha Kameswaran 0

திருக்குறள் குறள் – 35. அழுக்கா றவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்ற தறம் (1-4-5) பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல் அவற்றைத் தவிர்த்து வாழ்வதே அறமாகும். Azhukkaa ravaaveguli innaachchol naangum izhukkaa iyandra dharam. That conduct is virtue which is free from these four things, viz, malice, desire, anger and bitter speech

திருக்குறள்

01/05/2016 Sujatha Kameswaran 0

திருக்குறள் குறள் – 29. குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயுங் காத்தல் அரிது நல்ல பண்புகளாகிய மலையின்மேல் ஏறி நின்ற பெரியோர், ஒரு கணப்பொழுதே சினம் கொள்வார் ஆயினும் அதிலிருந்து அவரைக் காத்தல் அரிதாகும். Kunamennum kundreri nindraar veguli kanameyumg kaaththal aridhu The anger of those who have ascended the mountain of goodness, though it continue but for a […]

1 2