திருப்பாவை – பாசுரம் 30

14/01/2021 Sujatha Kameswaran 0

திருப்பாவை வங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனைத் திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி அங்கப் பறைகொண்ட ஆற்றை, அணி புதுவைப் பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே இங்கிப் பரிசுரைப்பார், ஈரிரண்டு மால்வரைத்தோள் செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால் எங்கும் திருவருள்பெற் றின்புறுவர் எம்பாவாய்! – ஆண்டாள்

திருப்பாவை – பாசுரம் 28

12/01/2021 Sujatha Kameswaran 0

  திருப்பாவை கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்; அறிவொன்று மில்லாத ஆய்க்குலத்து உன்தன்மைப் பிறவிப் பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்; குறைவொன்று மில்லாத கோவிந்தா! உன்தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது! அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச் சிறுபேர ழைத்தனவும் சீறி யருளாதே, இறைவா, நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்! – ஆண்டாள்

திருப்பாவை – பாசுரம் 27

11/01/2021 Sujatha Kameswaran 0

திருப்பாவை கூடாரை வெல்லுஞ்சீர்க் கோவிந்தா! உன்தன்னை பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்; நாடு புகழும் பரிசினால் நன்றாக, சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே பாடகமே யென்றனைய பல்கலனும் யாம் அணிவோம்; ஆடை உடுப்போம்; அதன்பின்னே பாற்சோறு மூடநெய் பெய்து முழங்கை வழிவார கூடியிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்! – ஆண்டாள்

திருப்பாவை – பாசுரம் 26

10/01/2021 Sujatha Kameswaran 0

திருப்பாவை மாலே! மணிவண்ணா! மார்கழி நீராடுவான் மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல் ஞாலத்தை எல்லாம் நடுங்குமுரல்வன பாலன்ன வண்ணத்துள் பாஞ்சசன்னியமே போல்வன சங்கங்கள் போய்ப்பாடுடையனவே, சாலப்பெரும் பறையே, பல்லாண்டிசைப்பாரே, கோல விளக்கே, கொடியே, விதானமே, ஆலின் இலையாய்! அருளேலோர் எம்பாவாய்! – ஆண்டாள்

திருப்பாவை – பாசுரம் 25

09/01/2021 Sujatha Kameswaran 0

திருப்பாவை ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர, தரிக்கிலானாகித் தான் தீங்கு நினைந்த கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை அருத்தித்து வந்தோம்; பறைதருதி யாகில் திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி வருத்தமுந்தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்! – ஆண்டாள்

திருவெம்பாவை பாசுரம் – 14

29/12/2020 Sujatha Kameswaran 0

திருவெம்பாவை – பாசுரம் 14 காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக் கோதை குழலாட வண்டின் குழாம் ஆட சீதப்புனலாடிச் சிற்றம்பலம் பாடி வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடி சோதி திறம்பாடி சூழ்கொன்றைத் தார்பாடி ஆதி திறம்பாடி அந்தமா மாபாடி பேதித்து நம்மை வளர்ந்தெடுத்த பெய்வளை தன் பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்.                           […]

திருப்பாவை – பாசுரம் 7

22/12/2020 Sujatha Kameswaran 0

திருப்பாவை – பாசுரம் 7 கீசுகீ சென்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்துபேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே!காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்துவாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்ஓசைபடுத்தத் தயிரரவம் கேட்டிலையோ?நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்திகேசவனைப் பாடவும்நீ கேட்டே கிடத்தியோ?தேசமுடையாய்! திறவேலோர் எம்பாவாய்! – ஆண்டாள்

திருப்பாவை

20/12/2020 Sujatha Kameswaran 0

திருப்பாவை – பாசுரம் 5 மாயனை மன்னுவடமதுரை மைந்தனைத்தூய பெருநீர் யமுனைத் துறைவனைஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத்தாயைக் குடல்விளக்கம் செய்ததாமோதரனைத்தூயோமாய் வந்துநாம் தூமலர் தூவித்தொழுதுவாயினாற்பாடி மனத்தினால் சிந்திக்கப்போயபிழையும் புகுதருவான் நின்றனவும்தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்! – ஆண்டாள்

திருப்பாவை

16/12/2020 Sujatha Kameswaran 0

திருப்பாவைபாசுரம் – 1 மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச்சிறுமீர்காள்!கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்நாராயணனே, நமக்கே பறைதருவான்,பாரோர் புகழப் படிந்தேலோ எம்பாவாய்! – ஆண்டாள்