தனித்துவம்

13/07/2019 Sujatha Kameswaran 0

உலகில் உள்ள அனைவருக்கும் தனித்தன்மை உண்டு. அதுவே அவர்களின் தனித்துவம்.  இரட்டையர்களானாலும் அவர்கள் இருவருக்கும் தனித்தனியே சில திறமைகள், செயல்பாடுகள் இருக்கும். தனித்துவமும் ஒரு தத்துவமே. நமது தனித்துவத்தை – தனித்திறமையை நாமே உணரமுடியும். நமது தனித்திறமையை எவ்வாறு அறிவது? மிகவும் எளிய வழியில் நம்மாலேயே உணரமுடியும். அதாவது, நமக்கு இயல்பாகவும், எளிதாகவும் எவ்வெவற்றையெல்லாம்  செய்ய முடிகிறதோ அவ்வவற்றின் மூலமாக நமது தனித்திறனை நமது செயல்திறன்கள் மூலம் அறியலாம். ஒவ்வொரு வெற்றியாளரும் […]

ஜனநாயகம்

18/04/2019 Sujatha Kameswaran 0

அனைவருக்கும் உண்டு ஜனநாயகக் கடமை. தனிமனித ஒழுக்கத்தை அடித்தளமாகக்கொண்டது இது. மனித உணர்வுகளை மதிக்கத்தெரிந்ததை வெளிப்படுத்த கிடைக்கும் வாய்ப்பு. மேலும் தான் யார் என்பதை உணர்ந்து, பிறருக்கும் உணர்த்த ஏதுவாய் அமையும் தருணம். தெளிவான எண்ணத்துடன், பல்வேறு விஷயங்களை அலசி ஆராய்ந்து திடமான முடிவினை எடுக்கும் திறன் இவைகளை அறிய உதவும் தருணம் ஜனநாயகக் கடமையை ஆற்றும்போது ஏற்படும். வாழ்க ஜனநாயகம் ! வாழ்க ஜனங்களின் கடமை உணர்வு !

எண்ணங்கள் வண்ணங்கள்

19/04/2016 Sujatha Kameswaran 0

எண்ணங்கள் வண்ணங்கள் வெற்றியின் தடங்கல்: செயல்களில் வெற்றிகொள்ள, மேற்கொள்ளப்படும் உக்திகள், பின்பற்றப்படும் நடைமுறைகள் போன்றவைகள் மட்டுமல்லாமல், செயல்கள் குறித்த விமர்சனங்கள் மிகவும் முக்கியமானவை. மோசமான விமர்சனகள், செயல்களை தடைபடுத்தி, வெற்றிக்குப் பெருங்தடங்கலாய் அமையும். எதிர்பாராதவர்களிடமிருந்து கிடைக்கும் சாதாரண விமர்சனமும் ஒருவித உற்சாகத்தை அளிக்கும். அதேசமயம் நாம் எதிர்பார்ப்பவரிடமிருந்து வராத சாதாரண விமர்சனமும் நம்மை சலிப்படைய செய்யலாம். ஒவ்வொரு விமர்சனமும் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்தும். இக்காரணத்தினாலேயேதான், தற்பொழுது உலகில் பெரும்பாலானோர் Facebook, […]

எண்ணங்கள் வண்ணங்கள்

16/04/2016 Sujatha Kameswaran 0

எண்ணங்கள் வண்ணங்கள் வெற்றியடைய வழிகள்: அனைவரின் எண்ணமும் எடுத்த காரியத்தில் வெற்றியடைய வேண்டும் என்பதுதான். யாரும் தோற்கவிரும்புவதில்லை. வெற்றி என்பது செய்யும் வேலையின் அல்லது எடுத்த செயலில் எதிர்நோக்கிய பலனை அல்லது அடையவேண்டிய இலக்கை மனநிறைவுடன் அடைவது எனலாம். வெற்றியடைய சில வழிமுறைகள் உள்ளன. தேர்ந்தெடுக்கும் செயலைப்பற்றிய அறிவு, அதனை செய்யவேண்டிய முறைகளைப்பற்றிய தெளிவு, அனுபவ அறிவு, ஏற்ற இறக்கங்களை சந்திக்கும் துணிவு, பிரச்சனைகளை எதிர்கொள்ள பக்குவம், கடினப்பாதைகளை கடந்துவர […]

திருக்குறள்

06/04/2016 Sujatha Kameswaran 0

திருக்குறள் குறள் – 4. வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல (1-1-4) Venduthal vendaamai ilaanadi seirnthaarkku Yandum idumbai ila விருப்பு, வெறுப்பு இல்லாத் இறைவனின் அடிகளை இடைவிடாமல் நினைப்பவருக்கு எவ்விடத்திலும், எக்காலத்திலும் துன்பம் இல்லை. To those who meditate the feet of Him who is void of desire or aversion, evil shall never come.

எண்ணங்கள் வண்ணங்கள்

06/04/2016 Sujatha Kameswaran 0

உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும். -மகாகவி பாரதியார் எண்ணங்கள் வண்ணங்கள் நம்பிக்கை: உலக மக்கள் நிம்மதியுடன் வாழ ஆதாரம் நம்பிக்கை. நம்மேல் நாம் வைக்கும் நம்பிக்கை, நம்மை உயர்த்தும். பிறர்மேல் நாம் வைக்கும் நம்பிகை நம் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் மேம்படுத்தும், பிறர் நம் மேல் வைக்கும் நம்பிக்கை நம்மை மேலும் முன்னேற்றுவதுடன், அவர்களுடனான உறவுமுறையை மேலும் சிறப்பானதாக மாற்றும். பொதுவாக நாம் எதைப்பார்க்கிறோமோ, அதை நம்புவதில்லை. எதை நம்புகிறோமோ, […]