ஒளவையாரின் இலக்கிய ஞானம்

30/08/2020 Sujatha Kameswaran 0

ஒளவையார் இறைவனின் அருளால், இலக்கிய ஞானமும், உலக அறிவில் மேம்பட்ட எண்ணமும் உடையவராய் திகழ்ந்தார். உலக வாழ்க்கை முறைப்பற்றியும், அதிலிருந்து மேம்பட்ட நிலையை அடைவதற்கான வழிகளையும் தம் இலக்கிய ஞானத்தின் துணைக்கொண்டு அனைவருக்கும் தெளிவுபடுத்தினார். அவற்றுள் ஒரு பகுதி: அரியது: அரிது அரிது மானிடர் ஆதல் அரிது;மானிடர் ஆயினும் கூன் குருடு செவிடுபேடு நீங்கிப் பிறத்தல் அரிது.பேடு நீங்கிப் பிறந்த காலையும்ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது;ஞானமும் கல்வியும் நயந்த காலையும்தானமும் […]

கொன்றை வேந்தன்

17/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 46. தொழுதூண் சுவையின் உழுதூண் இனிது. மற்றவரிடம் கெஞ்சிக்கேட்டு(பிச்சையெடுத்து) உண்பதைவிட, தானே உழுது அல்லது உழைத்து உண்ணலாம். 47. தோழனோடும் ஏழைமை பேசேல். நெருங்கிய நண்பரிடம்கூட உனது வறுமை நிலையை வெளிப்படுத்திப் புலம்பக்கூடாது.

கொன்றை வேந்தன்

12/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 36. சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர். சோம்பல் குணம் கொண்டவர், வறுமையடைந்து துன்புறுவர். 37. தந்தைசொல் மிக்க மந்திரமில்லை. தந்தை கூறும் அறிவுரையைவிட, மேலான நல்லது ஒன்றுமில்லை.    

கொன்றை வேந்தன்

04/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 20. கெடுவது செய்யின் விடுவது கருமம். ஒரு செயலானது தீயவிளைவைத்தருவதாக இருந்தால், அச்செயலைச் செய்யாமல் விடுவது நல்லது. 21. கேட்டில் உறுதி கூட்டும் உடைமை. வறுமை நிலை ஏற்பட்டாலும், நமது மன உறுதியே, நம்மிடம் செல்வத்தைக் கொண்டுசேர்க்கும்.