திருப்பாவை – பாசுரம் 16

31/12/2020 Sujatha Kameswaran 0

திருப்பாவை நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய கோயில்காப்பானே! கொடித்தோன்றும் தோரண வாயில்காப்பானே! மணிக்கதவம் தாள்திறவாய்; ஆயர் சிறுமியரோமுக்கு அறைபறை மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்; தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்; வாயால் முன்னமுன்னம் மாற்றாதே அம்மா! நீ நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய்! – ஆண்டாள்

திருப்பாவை – பாசுரம் 15

30/12/2020 Sujatha Kameswaran 0

திருப்பாவை எல்லே இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ? சில்லென்றழையேன்மின், நங்கைமீர்! போதர்கின்றேன்; ‘வல்லை, உன் கட்டுரைகள்! பண்டேஉன் வாயறிதும்!’ ‘வல்லீர்கள் நீங்களே, நானேதான் ஆயிடுக!’ ‘ஒல்லைநீ போதாய், உனக்கென்ன வேறுடையை?’ ‘எல்லோரும் போந்தாரோ?’ ‘போந்தார், போந்து எண்ணிக்கொள்’ வல்லானை கொன்றானை, மாற்றாரை மாற்றழிக்க வல்லானை, மாயனைப் பாடேலோர் எம்பாவாய்! – ஆண்டாள்

திருப்பாவை – பாசுரம் 9

24/12/2020 Sujatha Kameswaran 0

திருப்பாவை – பாசுரம் 9 தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரியதூபங்கமழத் துயிலணைமேல் கண்வளரும்மாமான் மகளே! மணிக்கதவம் தாழ்திறவாய்;மாமீர்! அவளை எழுப்பீரோ? உம்மகள்தான்ஊமையோ? அன்றிச் செவிடோ? அனந்தலோ?ஏமப் பெருந்துயில் மந்திரப்பட்டாளோ?மாமாயன், மாதவன், வைகுந்தன், என்றென்றுநாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்! – ஆண்டாள்