கொன்றை வேந்தன்
கொன்றை வேந்தன் 72. மின்னுக்கெல்லாம் பின்னுக்கு மழை. முதலில் தோன்றும் மின்னல் எல்லாம், பிறகு மழை பெய்யப் போவதை அறிவிக்கும் அறிகுறியாகும். 73. மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது. ஓட்டுனர் இல்லாத கப்பல்/படகு ஒழுங்காக ஓடாது.
கொன்றை வேந்தன் 72. மின்னுக்கெல்லாம் பின்னுக்கு மழை. முதலில் தோன்றும் மின்னல் எல்லாம், பிறகு மழை பெய்யப் போவதை அறிவிக்கும் அறிகுறியாகும். 73. மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது. ஓட்டுனர் இல்லாத கப்பல்/படகு ஒழுங்காக ஓடாது.
கொன்றை வேந்தன் 70. மருந்தேயாயினும் விருந்தோடு உண். இறப்பில்லா வாழ்வு தரும் அமுதமே ஆனாலும், விருந்தினர்க்கும் பகிர்ந்து அளித்து உண்ணவேண்டும். 71. மாரி அல்லது காரியம் இல்லை. மழை தக்கக் காலத்தில் பெய்யாவிடில் அதனைச் சார்ந்த வேலைகள் ஏதும் நடைப்பெறாது.
திருக்குறள் குறள் – 20. நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும் வானின் றமையா தொழுக்கு (1-2-10) Neerin dramaiyaa dhulakenin yaaryaarkkum vaanin dramaiyaadhu ozhukku எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும். If it be said that the duties of life cannot be discharged by any person without water, so without […]
திருக்குறள் குறள் – 19. தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம் வானம் வழங்கா தெனின்(1-2-9) Thaanam thavamirandum thangaa viyanulakam vaanam vazhangaa dhenin மழை பெய்யவில்லையானால், இந்த பெரிய உலகத்தில் பிறர் பொருட்டு செய்யும் தானமும், தம் பொருட்டு செய்யும் தவமும் இல்லையாகும். If rain fall not, penance and alms-deeds will not dwell within this spacious world
திருக்குறள் குறள் – 18. சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு (1-2-8) Sirappotu posanai sellaadhu vaanam varakkumel vaanorkkum eendu மழை பொய்த்துப் போனால் தெய்வத்திற்குத் தினமும் நடக்கும் பூசனையும் நடக்காது; ஆண்டுதோறும் கொண்டாடப்படும் திருவிழாவும் நடைபெறாது. If the heaven dry up, neither yearly festivals, nor daily worship will be offered in this world, to the […]
திருக்குறள் குறள் – 15. கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை (1-2-5) Keduppadhooum Kettaarkkuch Chaarvaaimar traange Etuppadhooum Ellaam Mazhai பெய்யாமல் வாழ்வைக் கெடுக்க வல்லதும் மழை; மழையில்லாமல் வளம் கெட்டு நொந்தவர்க்கும் துணையாய் அவ்வாறே காக்க வல்லதும் மழையாகும். Rain by its absence ruins men; and by its existence restores them to fortune
திருக்குறள் குறள் – 14. ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும் வாரி வளங்குன்றிக் கால் (1-2-4) Erin Uzhaaar Uzhavar Puyalennum Vaari Valangundrik Kaal மழை என்னும் வருவாய் வளம் குன்றி விட்டால், ( உணவுப் பொருள்களை உண்டாக்கும்) உழவரும் ஏர் கொண்டு உழமாட்டார் If the abundance of wealth imparting rain diminish, the labour of the plough must cease
திருக்குறள் குறள் – 12. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை. (1-2-2) Thuppaarkkuth thuppaaya thuppaakkith thuppaarkkuth thuppaaya thoovum mazhai. உண்பவர்களுக்கு நல்ல உணவுப் பொருள்களை, மழைதான் விளைவித்துத் தருகிறது. அதே மழை, தானும் ஓர் உணவுப் பொருளாகவும் குடிநீர் வடிவில் அமைகிறது. It is rain which produces pure food-grains for us. The very same rain serves us […]
திருக்குறள் Thirukkural 2. வான்சிறப்பு The goodness of rain குறள் – 11. வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று. (1-2-1) Vaan nintru ulagam vazhangi varudhalaal thaan amizhdham yentru unaral maatru உலகில் உள்ள எல்லா உயிர்களையும் மழைதான் வாழவைக்கிறது. எனவே தான், மழை என்பது, மனிதர்களின் நல்வாழ்விற்கு மருந்தான அமிழ்தம் என்கிறோம். The world exists because of regular […]
திருக்குறள் குறள் – 13. விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உள்நின் றுடற்றும் பசி (1-2-3) மழை பெய்யாமல் பொய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும் Vinindru poippin virineer viyanulakaththu ulnindru utatrum pasi If the cloud, withholding rain, deceive (our hopes) hunger will long distress the sea-girt spacious world
Copyright © 2024 | WordPress Theme by MH Themes