திருப்பாவை – பாசுரம் 24

08/01/2021 Sujatha Kameswaran 0

திருப்பாவை அன்று இவ்வுலகம் அளந்தாய்! அடிபோற்றி, சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய்! திறல்போற்றி, பொன்றச் சகடம் உதைத்தாய்! புகழ்போற்றி, கன்று குணிலா எறிந்தாய்! கழல்போற்றி, குன்று குடையா எடுத்தாய்! குணம்போற்றி, வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி, என்றென்று உன்சேவகமே ஏத்திப் பறைகொள்வான் இன்றுயாம் வந்தோம், இரங்கேலோர் எம்பாவாய்! – ஆண்டாள்

திருப்பாவை – பாசுரம் 21

05/01/2021 Sujatha Kameswaran 0

திருப்பாவை ஏற்றகலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள் ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்; ஊற்றமுடையாய்! பெரியாய்! உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்; மாற்றார் உனக்கு வலிதொலைந்து உன்வாசற்கண் ஆற்றாதுவந்து உன்னடிபணியுமாபோலே, போற்றியாம், வந்தோம், புகழ்ந்தேலோர் எம்பாவாய்! – ஆண்டாள்