கொன்றை வேந்தன்

16/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 44. தேடாது அழிக்கின் பாடாய் முடியும். மேற்கொண்டு பொருளைச் சேர்ப்பதற்கு முயற்சி செய்யாமல், தன்னிடம் இருக்கும் செல்வத்தை செலவு செய்வது, அழிவைத்தரும். 45. தையும் மாசியும் வையகத்து உறங்கு. பனிபொழியும் மாதங்களான தை மற்றும் மாசியில், வைக்கோலால் வேயப்பட்ட வீட்டில் உறங்கவேண்டும்.

கொன்றை வேந்தன்

13/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 38. தாயிற்சிறந்ததொரு கோயிலும் இல்லை. பெற்ற தாயைவிட சிறந்த வணங்கத்தக்க கோயில் இல்லை.   39. திரைகடல் ஓடியும் திரவியம் தேடு. கடல் தாண்டி வெளிநாடு சென்றாவது, பொருள் ஈட்டவேண்டும்.  

கொன்றை வேந்தன்

11/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 34. சையொத்திருந்தால் ஐயம் இட்டுண். மற்றவர்க்கு உதவும் அளவில் பொருள் இருந்தால், இல்லாதவர்க்கு இயன்றவரை, தான தர்மம் செய்துவிட்டு, உண்ணவேண்டும். 35. சொக்கர் என்பவர் அத்தம் பெறுவர். நல்ல மனம் உடையவர், இறுதியில் நற்கதியே அடைவர்.

ஆத்திசூடி

19/04/2016 Sujatha Kameswaran 0

ஆத்திசூடி 86. பொருள்தனைப் போற்றி வாழ்         – செல்வத்தை வீணாக்காமல் பாதுகாத்து வேண்டியவற்றிற்கு செலவழித்து வாழவேண்டும். 87. போர்த் தொழில் புரியேல்                   – வீணான சண்டைகளில் ஈடுபடக்கூடாது. 88. மனம் தடுமாறேல்                                  – எச்செயலைச் செய்யும்போதும் […]