கொன்றை வேந்தன்

02/06/2016 Sujatha Kameswaran 2

கொன்றை வேந்தன் 78. மைவிழியார்தம் மனையகன்று ஒழுகு. மைதீட்டிய கண்களால் ஆண்களை மயக்கி இழுக்கும் விலைமகளிரின் வீட்டை நெருங்காமல் வாழவேண்டும். 79. மொழிவது மறுக்கின் அழிவது கருமம். பெரியோர்களின் அனுபவ உரையைக் கேட்காமல் செய்கின்ற செயல்கள் கெட்டுப்போகும்.

கொன்றை வேந்தன்

31/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 74. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். முன்னர் பிறர்க்கு ஒருவர் துன்பம் செய்தால் பின்னொரு நாள் அத்துன்பம் அவருக்கே வரும். 75. மூத்தோர் சொல் வார்த்தை அமிழ்தம். பெரியோர்கள் கூறும் அறிவுரை வார்த்தைகள் நம்மை அழிவிலிருந்து காப்பாற்றும் அமுதம் போன்றதாகும்.

கொன்றை வேந்தன்

28/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 68. பொல்லாங்கு என்பவை எல்லாம் தவிர். தீயவை என ஆன்றோர், பெரியோர் கூரிய அனைத்தையும் விலக்கிவிட வேண்டும். 69. போனகம் என்பது தான் உழந்து உண்டல். தனது சொந்த உழைப்பால் பெற்ற ஊதியத்தில் உண்ணும் உணவே சிறந்த உணவாகும்.

திருக்குறள்

28/04/2016 Sujatha Kameswaran 0

திருக்குறள் குறள் – 26. செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார் (1-3-6) Seyarkariya Seyvaar Periyar Siriyar Seyarkariya Seykalaa Thaar செய்வதற்கு அருமையான செயல்களை செய்ய வல்லவரே பெரியோர். செய்வதற்கு அரிய செயல்களைச் செய்யமாட்டாதவர் சிறியோர். The great will do those things which is difficult to be done; but the mean cannot do them