ஆசாரக் கோவை

19/04/2023 Sujatha Kameswaran 0

ஆசாரக்கோவை என்னும் இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுல் ஒன்றாகும். இந்நூலில் ஆசிரியர் வண்கயத்தூர் என்ற ஊரில் வாழ்ந்த பெருவாயின் முள்ளியார். இந்த நூலின் மூலநூல் ‘ஆரிடம்’ என்னும் வடமொழி நூலாகும். இதில் உள்ள ஆசாரங்கள் ‘சுக்ர ஸ்மிருதி’ எனும் நூலில் உள்ளவை ஆகும். நல்லொழுக்கம் ஒழுக்கம் தவறாதவர் அடையும் நன்மைகள் ஒருமனதோடு செய்யவேண்டியவை விடியற்காலையில் செய்யவேண்டியவை எச்சிலுடன் தொடக்கூடாதவை காணக்கூடாதவை நால்வகை எச்சில் எச்சிலுடன் செய்யக்கூடாதவை காலை மற்றும் மாலையில் கடவுளை […]

ஆண்மை-பெண்மை

08/01/2017 Sujatha Kameswaran 2

ஆண்மை-பெண்மை   நம் சமூகத்தில் பொதுவாக ஒரு மனிதனின் இயலாமையைப் பற்றிச் சுட்டிக்காட்ட, நீ ஒரு ஆம்பளையா? ஆம்பளைனா இந்த சவாலை ஏற்றுக்கொள் – என்பனபோன்ற வசனங்களை உபயோகிப்ப்பதுண்டு. இந்த ஆம்பளை, என்பது ஆண்களுக்கு மட்டும்தானா? பெண்களுக்கு கிடையாதா? என்கிற கேள்விகளுக்கெல்லாம் விளக்கம் இதோ… ஆண்மை என்பது வீரத்தைக்குறிக்கும். பெண்மை என்பது மென்மையைக்குறிக்கும். ஆண்களுக்கு மட்டுமே வீரம் உரியதென பொருள் கொள்ளலாகாது. சங்க கால முறைப்படி ஆண்களே போரிடச்சென்றனர். அதனாலேயே […]

கொன்றை வேந்தன்

27/05/2016 Sujatha Kameswaran 2

கொன்றை வேந்தன் 66. பேதைமை என்பது மாதர்க்கு அணிகலம். அறிந்தும் அறியாததுபோல் அடங்கி நடப்பதே, பெண்களுக்கு சிறந்த அணிகலனாகும். 67. பையச் சென்றால் வையம் தாங்கும். ஒருவர் கோபமடையாமல், பொறுமையுடன் செயல்பட்டால், அவரை இவ்வுலகம் போற்றும்.

கொன்றை வேந்தன்

14/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 40. தீராக் கோபம் போராய் முடியும். நீங்காத பெருங்கோபம், இறுதியில் பெரும் போர் ஏற்படச்செய்யும். 41. துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு. கணவனின் துன்பம் கண்டு துடிக்காத பெண், அடிவயிற்றில் கட்டிய நெருப்பைப் போன்றவளாவாள்.

கொன்றை வேந்தன்

01/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 14. கற்பு எனப்படுவது சொல் திறம்பாமை. கற்பு என்பது, நடத்தைத் தவறாமையாகும். 15. காவல்தானே பாவையர்க்கு அழகு. நல்லொழுக்கம் தவறாமல், தன்னைக் காத்துக்கொள்வது பெண்களுக்கு சிறப்பானதாகும்.

கொன்றை வேந்தன்

29/04/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 10. ஒருவனைப் பற்றி ஓரகத் திரு. பெண்ணானவள், நல்ல ஆண் ஒருவனைத் தேர்ந்தெடுத்து, அவனுடன் ஓரே வீட்டில் இன்பமாய் வாழவேண்டும். 11. ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம். வேதங்களை நன்கு ஓதுவதே, அந்தணர்களுக்கு மிகச்சிறந்த ஒழுக்கமாகும்.

கொன்றை வேந்தன்

26/04/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 4. ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர். கஞ்சத்தனத்துடனும், பிறருக்குத் தரக்கூடாது என்கிற எண்ணத்துடனும் சேர்த்து வைக்கும் செல்வமானது திருடர்களால் அபகரிக்கப்படும். 5. உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு. குறைந்த அளவு உணவு உண்பதே பெண்களுக்கு அழகைத்தரும்.