நட்பு

02/04/2020 Sujatha Kameswaran 0

நல்ல நட்பு நல்ல வாழ்வைத்தரும் உறவுமுறைகளில் நட்பு என்பது சிறந்தது. அதிலும் நல்ல ஆழ்ந்த நட்பு மிகவும் சிறப்பானது. நட்பைப்பற்றி பல புலவர்களும் அறிஞர்களும் தமது சிறந்தக் கருத்துக்களைக் கூறியுள்ளனர். புராணம், இலக்கியம் உரைக்கும் நட்பு: கம்ப ராமாயணத்தில் குகபடலத்தில், ராமன் தன்னைக்காண வந்த குகனைப்பார்த்து, ‘யாதினும் இனிய நண்ப! எல்லாப் பொருள்களினும் இனிமையான நண்பனே; என்பார். நட்பிற்கு பெருமை சேர்க்கும் நண்பனுக்குக் கொடுக்கும் மரியாதையை கம்பர் தமது ராமாயணத்தில் […]

கலி காலம்

01/03/2020 Sujatha Kameswaran 0

புராணங்களின் மூலமாக கலியுகம் அதாவது கலிகாலம் எவ்வாறு இருக்கும் என்பதைப் பற்றியத் தகவல்களை தெரிந்துகொள்வோம். கலியுகத்தில் நிகழக்கூடியதை காகபுஜண்டர் கருடனுக்குக் கூறியதாக சில விவரங்கள் ராமாயணத்தில் உத்திரகாண்டத்தில் விளக்கப்பட்டுள்ளது. அவை, கலியுகத்தில் மக்களுக்கு மனம்போனபடி நடப்பதே மார்க்கம் என்றாகிவிடும். தங்கள் லாபத்துக்காக மக்களுக்கு பலவிதமான நெறிமுறைகளை எடுத்துச்சொல்லும் புனித நூல்கள் மறைக்கப்படும். தர்மசெயல்கள் எல்லாம் பேராசையாலும், தீய தூண்டுதல்களாலும் மாற்றப்படும். தற்பெருமை, சுய விளம்பரம் தேடுபவர்கள் அறிஞர்கள் என்று போற்றப்படுவர். […]

கோயிலின் அமைப்பு

29/07/2019 Sujatha Kameswaran 0

ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு அமைப்பு இருக்கும். பெரும்பாலும் புராதன கோயில்களின் அமைப்பு ஒரே விதத்திலேயே அமையும். ஆகம விதிகளின்படி கோயிலை நிர்மாணித்திருப்பர். கோயிலுக்கு அதிலுள்ள பல விஷயங்கள் அழகு சேர்த்தாலும், கோயிலின் மண்டபங்கள் தனிச்சிறப்பு வாய்ந்தவை. ஒவ்வொரு மண்டபமும் ஒவ்வொரு நோக்கத்திற்காக அமைக்கப்பட்டிருக்கும். அவற்றைப்பற்றி சுருக்கமாகக் காண்போம்; 1. அர்த்த மண்டபம் 2. மஹா மண்டபம் 3. நிருத்த மண்டபம் 4. பதினாறுகால் மண்டபம் 5. நூற்றுக்கால் (அ) ஆயிரங்கால் […]