திருப்பாவை – பாசுரம் 20

04/01/2021 Sujatha Kameswaran 0

திருப்பாவை முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்; செப்பம் உடையாய்! திறலுடையாய்! செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்; செப்பன்ன மென்முலை செவ்வாய் சிறுமருங்குல் நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்; உக்கமும் தட்டொளியும் தந்துஉன் மணாளனை இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்! – ஆண்டாள் முப்பத்து மூன்று கோடி தேவர்கள் இருந்தாலும், அவர்களுக்கெல்லாம் முன்னதாகச் சென்று பக்தர்களின் துயர் துடைக்கும் கலியுக தெய்வமே! நீ எழுவாயாக! […]

திருப்பாவை – பாசுரம் 19

03/01/2021 Sujatha Kameswaran 0

திருப்பாவை குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல் மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக் கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல் வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய்திறவாய்; மைத்தடங் கண்ணினாய்! நீ உன் மணாளனை எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண், எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால், தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்! – ஆண்டாள்   குத்து விளக்கெரிய, யானைத் தந்தத்தால் ஆன கட்டில் மேல் விரிக்கப்பட்ட மிருதுவான பஞ்சுமெத்தையில், விரிந்த கொத்தாக பூ […]

திருப்பாவை – பாசுரம் 16

31/12/2020 Sujatha Kameswaran 0

திருப்பாவை நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய கோயில்காப்பானே! கொடித்தோன்றும் தோரண வாயில்காப்பானே! மணிக்கதவம் தாள்திறவாய்; ஆயர் சிறுமியரோமுக்கு அறைபறை மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்; தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்; வாயால் முன்னமுன்னம் மாற்றாதே அம்மா! நீ நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய்! – ஆண்டாள்

திருவெம்பாவை – பாசுரம் 4

19/12/2020 Sujatha Kameswaran 0

திருவெம்பாவை – பாசுரம் 4 ஒள் நித்தில நகையாய் இன்னம் புலர்ந்தின்றோ?வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ?எண்ணிக்கொடு உள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்கண்ணைத் துயின்று அவமே காலத்தைப் போக்காதேவிண்ணுக்கொரு மருந்தை வேத விழுப்பொருளைக்கண்ணுக்கு இனியானைப் பாடிக் கசிந்துள்ளம்உள்நெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயேவந்துஎண்ணிக் குறையில் துயில் ஏலோர் எம்பாவாய்! – மாணிக்கவாசகர்   விளக்கம் :      (வந்தவர்கள் உறங்கியவளை எழுப்பி)      ஒளி வீசும் முத்துக்கள் போன்ற பற்களை உடையவளே! […]

ஆத்திசூடி

23/04/2016 Sujatha Kameswaran 0

ஆத்திசூடி 106. வேண்டி வினை செயேல்   – எதையும் எதிர்பார்த்து பிறர்க்கு உதவி செய்யவேண்டாம். 107. வைகறைத் துயில் எழு       – அதிகாலையில் உறக்கம் விட்டு எழுந்துவிடுவது நல்லது. 108. ஒன்னாரைத் தேறேல்          – பகைவர்கள் மீது எப்போதும் நம்பிக்கை வைக்காதே. 109. ஓரம் சொல்லேல்                   […]