சிவன் – யோகி

01/06/2022 Sujatha Kameswaran 0

அண்டசராசரங்களில் முதல் யோகி, முதல் புலனடக்க வல்லமையுள்ளவர் சிவன். கழுத்தில் பாம்பு ஊர்ந்து கொண்டிருந்தாலும், தலையில் கங்கை ப்ரவாகம் செய்துகொண்டிருந்தாலும், நதிக்கரையோ, பனிமலையோ, மயானமோ எவ்விடமாக இருந்தாலும் மன்மதனே வந்து அம்பெய்தினாலும் எதற்கும் அசையாத, தளர்ந்துபோகாத, எதற்கும் தன் யோகநிலை மாறாதவர் சிவன். சஞ்சலத்திற்கோ, சலசலப்பிற்கோ புலன்களை சிதறடிக்காமல், ஏகாக்ர சித்தத்தில் தவம் புரியும் ஆதியோகி சிவன். ஓம் நம சிவாய||

பஜகோவிந்தம் – 17

20/01/2021 Sujatha Kameswaran 0

பஜகோவிந்தம் – 17 அனுபவத்தாலும் ஆசை அகல்வதில்லை: அக்ரே வஹ்நி: ப்ருஷ்டே பாநு: ராத்ரௌ சுபுக ஸமர்ப்பித ஜாநு: | கரதல பிக்ஷஸ் தருதல வாஸ: ததபி ந முஞ்ச த்யாசா பாச: || பதவுரை: அக்ரே எதிரில் வஹ்நி: நெருப்பு ப்ருஷ்டே பின்புறத்தில் பாநு: சூரியன் ராத்ரௌ இரவில் சுபுக ஸமர்ப்பித ஜாநு: குளிருக்கு இதமாக முழங்காலில் முகத்தை புதைத்து வைத்திருக்கிறான் கரதல பிக்ஷ: கையில் பிட்சை ஏந்துகிறான் […]

கலி காலம்

01/03/2020 Sujatha Kameswaran 0

புராணங்களின் மூலமாக கலியுகம் அதாவது கலிகாலம் எவ்வாறு இருக்கும் என்பதைப் பற்றியத் தகவல்களை தெரிந்துகொள்வோம். கலியுகத்தில் நிகழக்கூடியதை காகபுஜண்டர் கருடனுக்குக் கூறியதாக சில விவரங்கள் ராமாயணத்தில் உத்திரகாண்டத்தில் விளக்கப்பட்டுள்ளது. அவை, கலியுகத்தில் மக்களுக்கு மனம்போனபடி நடப்பதே மார்க்கம் என்றாகிவிடும். தங்கள் லாபத்துக்காக மக்களுக்கு பலவிதமான நெறிமுறைகளை எடுத்துச்சொல்லும் புனித நூல்கள் மறைக்கப்படும். தர்மசெயல்கள் எல்லாம் பேராசையாலும், தீய தூண்டுதல்களாலும் மாற்றப்படும். தற்பெருமை, சுய விளம்பரம் தேடுபவர்கள் அறிஞர்கள் என்று போற்றப்படுவர். […]

கொன்றை வேந்தன்

26/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 64. பூரியோர்க்கு இல்லை சீரிய ஒழுக்கம். இழிவான, தரக்குறைவான செயல்களைப் புரிபவர்களுக்கு, நற்பண்புகள் இருக்காது. 65. பெற்றோர்க்கு இல்லை செற்றமும் சினமும். தவத்தினால் ஞானம் பெற்றவர்களுக்கு, பகை உணர்வும், கோபமும் இருக்காது.

கொன்றை வேந்தன்

15/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 42. தூற்றும் பெண்டிர் கூற்றெனத் தகும். கணவனைப் பற்றி அவதூறு பேசும் பெண்ணை, அக்குடும்பத்தின் எமன் என்று எனலாம். 43. தெய்வம் சீறின் கைதவம் மாளும். தெய்வத்தின் கோபத்திற்கு ஆளானால், முன்னர் தவம் செய்து பெற்ற புண்ணியம் அனைத்தும் அழிந்துபோகும்.

கொன்றை வேந்தன்

08/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 28. சிவத்தைப் பேணின் தவத்திற்கு அழகு. அனைத்தும் சிவமயம் என்றுக் கருதிப் போற்றுவதே, தவம் செய்பவர்க்கு மேன்மையாகும். 29. சீரைத் தேடின் ஏரைத் தேடு. சிறந்த வாழ்க்கை வேண்டுமெனில், உழவுத்தொழிலைச் செய்து வாழவேண்டும்.

திருக்குறள்

21/04/2016 Sujatha Kameswaran 0

திருக்குறள் குறள் – 19. தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம் வானம் வழங்கா தெனின்(1-2-9) Thaanam thavamirandum thangaa viyanulakam vaanam vazhangaa dhenin மழை பெய்யவில்லையானால், இந்த பெரிய உலகத்தில் பிறர் பொருட்டு செய்யும் தானமும், தம் பொருட்டு செய்யும் தவமும் இல்லையாகும். If rain fall not, penance and alms-deeds will not dwell within this spacious world