திருப்பாவை – பாசுரம் 25

09/01/2021 Sujatha Kameswaran 0

திருப்பாவை ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர, தரிக்கிலானாகித் தான் தீங்கு நினைந்த கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை அருத்தித்து வந்தோம்; பறைதருதி யாகில் திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி வருத்தமுந்தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்! – ஆண்டாள்

திருப்பாவை

18/12/2020 Sujatha Kameswaran 0

திருப்பாவை – பாசுரம் 3 ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால் தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து ஓங்குபெரும் செந்நெல் ஊடு கயலுகள பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத் தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள் நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்! – ஆண்டாள்

ஒளவையாரின் இலக்கிய ஞானம்

30/08/2020 Sujatha Kameswaran 0

ஒளவையார் இறைவனின் அருளால், இலக்கிய ஞானமும், உலக அறிவில் மேம்பட்ட எண்ணமும் உடையவராய் திகழ்ந்தார். உலக வாழ்க்கை முறைப்பற்றியும், அதிலிருந்து மேம்பட்ட நிலையை அடைவதற்கான வழிகளையும் தம் இலக்கிய ஞானத்தின் துணைக்கொண்டு அனைவருக்கும் தெளிவுபடுத்தினார். அவற்றுள் ஒரு பகுதி: அரியது: அரிது அரிது மானிடர் ஆதல் அரிது;மானிடர் ஆயினும் கூன் குருடு செவிடுபேடு நீங்கிப் பிறத்தல் அரிது.பேடு நீங்கிப் பிறந்த காலையும்ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது;ஞானமும் கல்வியும் நயந்த காலையும்தானமும் […]

கொன்றை வேந்தன்

06/06/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 86. ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு. மனம் சற்றும் தளராத ஊக்கமே, செல்வத்தை வளரச்செய்யும். 87. வெள்ளைக்கு இல்லை கள்ளச் சிந்தனை. தூய மனம் உடையவரிடம் வஞ்சக எண்ணம் இராது.

கொன்றை வேந்தன்

03/06/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 80. மோனம் என்பது ஞான வரம்பு ஒருவர் பெற்ற ஞானத்தின் எல்லை என்பது, பேசுவதைத் தவிர்த்து மௌனமாக இருப்பதேயாகும். 81. வளவன் ஆயினும் அளவறிந்து அழித்து உண். பேரரசனாக இருந்தாலும், தன்னிடமுள்ள செல்வத்தின் அளவை அறிந்து, அதற்கேற்ற செலவு செய்து, உண்டு வாழவேண்டும்.

கொன்றை வேந்தன்

01/06/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 76. மெத்தையில் படுத்தல் நித்திரைக்கு அழகு. இலவம் பஞ்சு மெத்தையில் உறங்குவது ஆழ்ந்த உறக்கத்தையும், ஆரோக்கியத்தையும் தரும். 77. மேழிச் செல்வம்படாது. உழவுத் தொழிலால் வரும் செல்வம் ஒருநாளும் அழிந்து போகாது.

கொன்றை வேந்தன்

04/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 20. கெடுவது செய்யின் விடுவது கருமம். ஒரு செயலானது தீயவிளைவைத்தருவதாக இருந்தால், அச்செயலைச் செய்யாமல் விடுவது நல்லது. 21. கேட்டில் உறுதி கூட்டும் உடைமை. வறுமை நிலை ஏற்பட்டாலும், நமது மன உறுதியே, நம்மிடம் செல்வத்தைக் கொண்டுசேர்க்கும்.

திருக்குறள்

03/05/2016 Sujatha Kameswaran 0

திருக்குறள் பால் : அறத்துப்பால் Section : Virtue அதிகாரம்: அறன் வலியுறுத்தல் – 4 Division : Assertion of the Strength of Virtue – 4 இயல் : பாயிரவியல் Chapter : Prologue – 1 குறள் – 31. சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு (1-4-1) அறம் சிறப்பையும் அளிக்கும்: செல்வத்தையும் அளிக்கும்: ஆகையால் உயிர்க்கு அத்தகைய அறத்தை […]

கொன்றை வேந்தன்

30/04/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 12. ஒளவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு. மற்றவர் வளர்ச்சியைப் பார்த்துப் பொறாமையால் பேசுவது, நாம் பெற்றுள்ள நல்லனவற்றை அழித்து விடும். 13. அஃகமும் காசும் சிக்கெனத் தேடு. சிக்கனமாக வாழ்க்கை நடத்தி, செல்வத்தை சேர்க்கவேண்டும்.

கொன்றை வேந்தன்

26/04/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 4. ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர். கஞ்சத்தனத்துடனும், பிறருக்குத் தரக்கூடாது என்கிற எண்ணத்துடனும் சேர்த்து வைக்கும் செல்வமானது திருடர்களால் அபகரிக்கப்படும். 5. உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு. குறைந்த அளவு உணவு உண்பதே பெண்களுக்கு அழகைத்தரும்.