பஜகோவிந்தம் – 27

10/05/2021 Sujatha Kameswaran 0

பஜகோவிந்தம் – 27 ஆன்மஞானியாதல்: காமம் க்ரோதம் லோபம் மோஹம்த்யக்த்வாத்மாநம் பாவய கோऽஹம் |ஆத்ம ஜ்ஞாந விஹீநா மூடா:தே பச்யந்தே நரக நிகூடா: || பதவுரை: காமம் – ஆசைக்ரோதம் – கோபம்; வெறுப்புலோபம் – பணத்தாசைமோஹம் – மயக்கம்த்யக்த்வா – விட்டுவிட்டுஆத்மாநம் – தன்னைப்பற்றிபாவய – நினைத்துப்பார்க: – யார்அஹம் – நான்ஆத்மஜ்ஞாந விஹீநா: – ஆன்மஞானமில்லாதவர்களோதே – அவர்கள்பச்யந்தே – துன்பத்தை அனுபவிக்கிறார்கள்நரகநிகூடா: – நரகத்தில் மூழ்கி […]

கொன்றை வேந்தன்

07/06/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 88. வேந்தன் சீறின் ஆந்துணை இல்லை. ஒருவர் மீது அரசன் கோபம் கொண்டாராகின், அவரை அவ்வரசனிடமிருந்து காப்பாற்ற யாரும் துணைப் புரியமாட்டார். 89. வைகல்தோறும் தெய்வம் தொழு. தினமும் இறைவனை வணங்கவேண்டும்.

கொன்றை வேந்தன்

27/05/2016 Sujatha Kameswaran 2

கொன்றை வேந்தன் 66. பேதைமை என்பது மாதர்க்கு அணிகலம். அறிந்தும் அறியாததுபோல் அடங்கி நடப்பதே, பெண்களுக்கு சிறந்த அணிகலனாகும். 67. பையச் சென்றால் வையம் தாங்கும். ஒருவர் கோபமடையாமல், பொறுமையுடன் செயல்பட்டால், அவரை இவ்வுலகம் போற்றும்.

கொன்றை வேந்தன்

26/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 64. பூரியோர்க்கு இல்லை சீரிய ஒழுக்கம். இழிவான, தரக்குறைவான செயல்களைப் புரிபவர்களுக்கு, நற்பண்புகள் இருக்காது. 65. பெற்றோர்க்கு இல்லை செற்றமும் சினமும். தவத்தினால் ஞானம் பெற்றவர்களுக்கு, பகை உணர்வும், கோபமும் இருக்காது.

கொன்றை வேந்தன்

15/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 42. தூற்றும் பெண்டிர் கூற்றெனத் தகும். கணவனைப் பற்றி அவதூறு பேசும் பெண்ணை, அக்குடும்பத்தின் எமன் என்று எனலாம். 43. தெய்வம் சீறின் கைதவம் மாளும். தெய்வத்தின் கோபத்திற்கு ஆளானால், முன்னர் தவம் செய்து பெற்ற புண்ணியம் அனைத்தும் அழிந்துபோகும்.

எண்ணங்கள் வண்ணங்கள்

10/04/2016 Sujatha Kameswaran 0

காரியத்தில் உறுதி வேண்டும் – மகாகவி பாரதியார் எண்ணங்கள் வண்ணங்கள் மன நிம்மதி:           அனைவருக்கும் மிக முக்கியமான ஒன்று மனநிம்மதியாகும். மனத்தில் செயலைப்பற்றிய அலைகள் இருந்தாலும், ஆழ்கடலின் அமைதிபோல ஒருவித அமைதியை, நிம்மதியை மனம் கொண்டிருக்கவேண்டும். மனமானது நமது உள்ளார்ந்த வழிகாட்டி. இதன் வழிகாட்டுதலுக்கு மாறாகச் செயல்படும்போது மனம் தனது அமைதியை இழக்கிறது.           நமது செயல்களின் வழியாக […]