கொன்றை வேந்தன்

30/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 72. மின்னுக்கெல்லாம் பின்னுக்கு மழை. முதலில் தோன்றும் மின்னல் எல்லாம், பிறகு மழை பெய்யப் போவதை அறிவிக்கும் அறிகுறியாகும். 73. மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது. ஓட்டுனர் இல்லாத கப்பல்/படகு ஒழுங்காக ஓடாது.

கொன்றை வேந்தன்

16/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 44. தேடாது அழிக்கின் பாடாய் முடியும். மேற்கொண்டு பொருளைச் சேர்ப்பதற்கு முயற்சி செய்யாமல், தன்னிடம் இருக்கும் செல்வத்தை செலவு செய்வது, அழிவைத்தரும். 45. தையும் மாசியும் வையகத்து உறங்கு. பனிபொழியும் மாதங்களான தை மற்றும் மாசியில், வைக்கோலால் வேயப்பட்ட வீட்டில் உறங்கவேண்டும்.

கொன்றை வேந்தன்

06/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 24. கோட்செவிக் குறளை காற்றுடன் நெருப்பு. கோள் சொல்லை விரும்புபவர்களிடம், கோள் மூட்டி விடுவது, காற்றோடு நெருப்பானது சேர்வதுபோல அழிவைத் தரும். 25. கெளவை சொல்லின் எவ்வருக்கும் பகை. மற்றவர்கள் மீது குற்றம் சொல்லிக்கொண்டே இருந்தால், எல்லோரிடமும் பகைமையே ஏற்படும்.

கொன்றை வேந்தன்

29/04/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 10. ஒருவனைப் பற்றி ஓரகத் திரு. பெண்ணானவள், நல்ல ஆண் ஒருவனைத் தேர்ந்தெடுத்து, அவனுடன் ஓரே வீட்டில் இன்பமாய் வாழவேண்டும். 11. ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம். வேதங்களை நன்கு ஓதுவதே, அந்தணர்களுக்கு மிகச்சிறந்த ஒழுக்கமாகும்.