காலச்சக்கரம்

13/04/2024 Sujatha Kameswaran 0

காலச்சக்கரம் காலமாற்றத்தைக் குறிக்கும் சொல் காலச்சக்கரம். இது காலம்-நேரம் மாறுவதைக் குறிப்பிடுவதோடு, அச்சுழற்சியியுடன் மானிடர்களும் எங்ஙனம் மாறுகின்றனர் என்பதை குறிக்கின்றது. இருபது வயதில் இதுதான் வேண்டும் என்று தோன்றும் முப்பது வயதில் இவைகள் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றும் நாற்பது வயதில் இதுவே போதும் என்று தோன்றும் ஐம்பது வயதில் இவைகள் இல்லையென்றாலும் பரவாயில்லை எனத் தோன்றும் அறுபது வயதில் எது இல்லையென்றாலும் பரவாயில்லை என்று தோன்றும் எழுபது […]

வாழ்க்கைக் காலம்

22/11/2022 Sujatha Kameswaran 0

வாழ்க்கையில் அனைவரும் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் ஒரே மாதிரியாக பெற்றுள்ளோம். அதுவே காலம். அனைவருக்கும் 24 மணி நேரம் என்பது பொதுவானதாக உள்ளது. இந்த காலத்திற்குள் நாம் எவ்வாறு செயல்படுகிறோம் என்பதனைப் பொறுத்தே நம் வாழ்வு அமைகிறது. இந்த கால அளவிற்குள் நமது சக்தியை & புத்தியை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதைக் கொண்டே நம் வாழ்வின் நிலை அமையும். நம் அனைவரிடமும் இருக்கும் சில பல ஏற்றத்தாழ்வுகள் இவற்றைக்கொண்டே […]

திருவெம்பாவை – பாசுரம் 4

19/12/2020 Sujatha Kameswaran 0

திருவெம்பாவை – பாசுரம் 4 ஒள் நித்தில நகையாய் இன்னம் புலர்ந்தின்றோ?வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ?எண்ணிக்கொடு உள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்கண்ணைத் துயின்று அவமே காலத்தைப் போக்காதேவிண்ணுக்கொரு மருந்தை வேத விழுப்பொருளைக்கண்ணுக்கு இனியானைப் பாடிக் கசிந்துள்ளம்உள்நெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயேவந்துஎண்ணிக் குறையில் துயில் ஏலோர் எம்பாவாய்! – மாணிக்கவாசகர்   விளக்கம் :      (வந்தவர்கள் உறங்கியவளை எழுப்பி)      ஒளி வீசும் முத்துக்கள் போன்ற பற்களை உடையவளே! […]

பஜ கோவிந்தம் – 11

25/10/2020 Sujatha Kameswaran 0

13. காலத்தின் மாறுதல்   தினயாமின்யௌ ஸாயம் ப்ராத: சிசிரவஸந்தௌ புனராயாத:  | கால: க்ரீடதி கச்சத்யாயு: ததபி ந முஞ்சத்யாசாவாயு:  ||   பதவுரை: தினயாமின்யௌ                     –  பகலும் இரவும் ஸாயம்                                    […]

பஜகோவிந்தம் – 13

20/09/2020 Sujatha Kameswaran 0

பஜகோவிந்தம் -13 காலத்தின் விளையாட்டு: தினயாமின்யௌ ஸாயம் ப்ராத:சிசிரவஸந்தெள புநராயாந: |கால: க்ரீடதி கச்சத்யாயு:ததபி ந முஞ்சத்யாசாவாயு: || பதவுரை: தினயாமின்யௌ         – பகலும் இரவும்ஸாயம்                              – மாலைப்ராத:                          […]

பஜகோவிந்தம் – 12

25/08/2020 Sujatha Kameswaran 0

பஜகோவிந்தம் – 12 கர்வம் கூடாது மாகுரு தந ஜந யௌவந கர்வம்ஹரதி நிமேஷாத் கால: ஸர்வம் |மாயாமயம் இதம் அகிலம் ஹித்வாப்ரஹ்மபதம் த்வம் ப்ரவிச விதித்வா || பதவுரை: மாகுரு                                  : செய்யாதே (கொள்ளாதே) தந ஜந யௌவந            […]

விடுகதையா இந்த வாழ்க்கை? – வாலிபப்பருவம்

15/11/2016 Sujatha Kameswaran 0

வாலிபப்பருவம் – விடலைப்பருவம் வாழ்க்கைச்சக்கரத்தில் வாலிபப்பருவம் என்பது பல புதிர்களுடன் கூடிய இனிய பருவம். அடுத்தடுத்தக்கட்டத்தில் பல வித்தியாசமான கோணங்களில் பல கேள்விகளையும் அதற்குத் தகுந்த பதில்களையும், சில நேரங்களில் எதிர்மறை பதில்களையும் கொண்டு அமையும் விடுகதைகள் பல கொண்ட வாழ்க்கையில், பெரும் விடுகதையாகவும் சவாலாகவும் அமையும் பருவம் இந்த வாலிபப்பருவம். இப்பருவத்தினருக்கு, தனக்குள் நடக்கும் மாற்றங்கள் சரிவரபுரிவதில்லை. இக்குழப்பத்தின் உச்சகட்டமே உள தடுமாற்றம் அதனால் ஏற்படும் செயல் தடுமாற்றங்கள் […]

கொன்றை வேந்தன்

24/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 60. பாலோடு ஆயினும் காலம் அறிந்து உண். பால் சேர்ந்த நல்ல உணவாக இருப்பினும், பசி தோன்றிய பின்னரே உண்ணவேண்டும். அதனை உண்ணும் நேரம் அறிந்தே உண்ணவேண்டும். 61. பிறன்மனை புகாமை அறமெனத் தகும். பிறர்மனைவி மீது ஆசைக்கொள்ளாமலும், பிறர் குடித்தனத்தைக் கெடுக்காமல் இருத்தலும் சிறந்த அறமாகும்.