திருப்பாவை – பாசுரம் 28

12/01/2021 Sujatha Kameswaran 0

  திருப்பாவை கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்; அறிவொன்று மில்லாத ஆய்க்குலத்து உன்தன்மைப் பிறவிப் பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்; குறைவொன்று மில்லாத கோவிந்தா! உன்தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது! அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச் சிறுபேர ழைத்தனவும் சீறி யருளாதே, இறைவா, நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்! – ஆண்டாள்

திருப்பாவை – பாசுரம் 22

06/01/2021 Sujatha Kameswaran 0

திருப்பாவை அங்கண் மாஞாலத்தரசர் அபிமான பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட்டிற்கீழே சங்கமிருப்பார்போல் வந்துதலைப் பெய்தோம்; கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப்போலே, செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ? திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற் போல், அங்கணிரண்டும் கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல் எங்கள்மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்! – ஆண்டாள்

திருவெம்பாவை – பாசுரம் 3

18/12/2020 Sujatha Kameswaran 0

திருவெம்பாவை – பாசுரம் 3 முத்தன்ன வெண்ணகையாய் முன்வந்து எதிர் எழுந்து என் அத்தன்! ஆனந்தன்! அமுதன் என்று அள்ளூறித் தித்திக்கப் பேசுவாய்! வந்துன் கடை திறவாய்! பத்துடையீர்! ஈசன் பழ அடியீர் பாங்குடையீர்! புத்தடியோம் புன்மை தீர்த்து ஆட்கொண்டால் பொல்லாதோ? எத்தோ நின் அன்புடைமை எல்லோம் அறியோமோ? சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை? இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய்! – மாணிக்கவாசகர் விளக்கம் : ‘முத்துபோன்ற பெண்பற்களைக் […]